புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸல்மான் (ரலி) அவர்கள் (நபி-ஸல் அவர்களை சந்திக்க) மதீனாவுக்கு வந்தபோது தட்டில் சில பேரித்தம் பழங்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது என்ன ஸல்மானே? என்று கேட்டார்கள். அதற்கவர், உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் இது தர்மம் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதை எடுத்து விடுங்கள்! நாங்கள் தர்மப் பொருட்களை உண்ண மாட்டோம்” என்று கூறினார்கள். எனவே ஸல்மான் (ரலி) அவர்கள் அதை எடுத்து விட்டார்.
அடுத்த நாளும் இதே போன்று அவர் செய்ய, நபி (ஸல்) அவர்களும் முன்பு கூறியது போன்றே கூறிவிட்டார்கள்.
அதற்கடுத்த நாளும் இதே போன்று ஸல்மான் (ரலி) அவர்கள் சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது என்ன ஸல்மானே! என்று கூறினார்கள். அதற்கவர், உங்களுக்கு இது அன்பளிப்பு என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் உணவு விரிப்பை விரியுங்கள் என்று கூறினார்கள்.
அப்போது (நபி-ஸல் அவர்களின் முதுகை திறந்ததாகக் கண்ட) ஸல்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முதுகில் உள்ள நபித்துவ முத்திரையைப் பார்த்தார். எனவே (அப்போதே) அவர் ஈமான் கொண்டார்.
ஒரு யூதருக்கு சொந்தமான இடத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரு விலைக்கு வாங்கினார்கள். மேலும் அதில் பேரீத்தங் கன்றுகளை நட்டு, அது பலன்தரும் வரை ஸல்மான் (ரலி) அவர்கள் அதில் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் அதில் சில பேரீத்தங் கன்றுகளை நட்டார்கள். ஒரே ஒரு பேரீத்தங் கன்றை உமர் (ரலி) அவர்கள் நட்டார்கள். அந்த வருடம் அனைத்து பேரீத்த மரங்களும் பலன் தந்தன. ஒரே ஒரு பேரீத்தமரம் பலன் தரவில்லை. நபி (ஸல்) அவர்கள், இதற்கு என்ன ஆயிற்று? என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அதை நான் தான் நட்டேன் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை பிடுங்கி விட்டு மீண்டும் நட்டு வைத்தார்கள். அதே வருடம் அது பலன் தந்தது.
(முஸ்னது அஹ்மத்: 22997)حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي حُسَيْنٌ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ قَالَ: سَمِعْتُ بُرَيْدَةَ يَقُولُ:
جَاءَ سَلْمَانُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَدِمَ الْمَدِينَةَ بِمَائِدَةٍ عَلَيْهَا رُطَبٌ فَوَضَعَهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذَا يَا سَلْمَانُ؟» قَالَ: صَدَقَةٌ عَلَيْكَ وَعَلَى أَصْحَابِكَ. قَالَ: «ارْفَعْهَا؛ فَإِنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ» . فَرَفَعَهَا،
فَجَاءَ مِنَ الْغَدِ بِمِثْلِهِ، فَوَضَعَهُ بَيْنَ يَدَيْهِ، قَالَ: «مَا هَذَا يَا سَلْمَانُ؟» قَالَ: صَدَقَةٌ عَلَيْكَ وَعَلَى أَصْحَابِكَ. قَالَ: «ارْفَعْهَا؛ فَإِنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ» . فَرَفَعَهَا،
فَجَاءَ مِنَ الْغَدِ بِمِثْلِهِ، فَوَضَعَهُ بَيْنَ يَدَيْهِ يَحْمِلُهُ فَقَالَ: «مَا هَذَا يَا سَلْمَانُ؟» فَقَالَ: هَدِيَّةٌ لَكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «ابْسُطُوا» .
فَنَظَرَ إِلَى الْخَاتَمِ الَّذِي عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَآمَنَ بِهِ.
وَكَانَ لِلْيَهُوَدِ فَاشْتَرَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا وَكَذَا دِرْهَمًا، وَعَلَى أَنْ يَغْرِسَ نَخْلًا فَيَعْمَلَ سَلْمَانُ فِيهَا حَتَّى تُطْعِمَ. قَالَ: فَغَرَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخْلَ إِلَّا نَخْلَةً وَاحِدَةً غَرَسَهَا عُمَرُ، فَحَمَلَتِ النَّخْلُ مِنْ عَامِهَا وَلَمْ تَحْمِلِ النَّخْلَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا شَأْنُ هَذِهِ؟» قَالَ عُمَرُ: أَنَا غَرَسْتُهَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ: فَنَزَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ غَرَسَهَا فَحَمَلَتْ مِنْ عَامِهَا
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22997.
Musnad-Ahmad-Alamiah-21919.
Musnad-Ahmad-JawamiulKalim-22394.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . ஸைத் பின் ஹுபாப்
3 . ஹுஸைன் பின் வாகித்
4 . அப்துல்லாஹ் பின் புரைதா
5 . புரைதா பின் ஹுஸைப் (ரலி)
இதில் இடம்பெறும் ஸைத் பின் ஹுபாப், ஹுஸைன் பின் வாகித் ஆகியோர் நடுத்தரமானவர்கள் என்பதால் சிலர் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்றும் சரியானது என்றும் கூறியுள்ளனர்.
العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله ط-أخرى (1/ 323)
1420- سمعت أَبِي يقول: قال وَكِيع: يقولون: إن سُلَيْمَان أصحهما حديثًا، يعني ابن بُرَيْدَة.
قال أَبِي: عبد الله بن بُرَيْدَة، الذي روى عنه حُسَيْن بن وَاقِد، ما أنكرها.
وأبو المُنِيب، أيضًا يقولون: كأنها من قبل هؤلاء.
அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் வாகித் என்பவரும், அபுல்முனீப் என்பவரும் அறிவிக்கும் செய்திகள் முன்கரானவை என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர்ரிஜால்-1420)
இந்த விமர்சனத்தின்படி சிலர் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் புரைதா பின் ஹுஸைப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹுஸைன் பின் வாகித் —> அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா பின் ஹுஸைப் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-22997, முஸ்னத் பஸ்ஸார்-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஹாகிம்-,
2 . ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-2576, முஸ்லிம்-4682,
https://youtube.com/shorts/F64icKzTUS0?si=nldSDx9MFw-nxoNu
இவர் சொல்லும் ஹதீஸ் “கன்சுல் உம்மால்”(5023),(5022),(16682)மற்றும் தப்ரானியில்(1047)துஆ என்ற கிதாபிலும் பதியப்பட்டுள்ளது.
١٠٤٧ – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُصَيْرٍ الْأَصْبَهَانِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: أَصَابَتْ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ فَاقَةٌ، فَقَالَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: لَوْ أَتَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتِيهِ وَكَانَ عِنْدَ أُمِّ أَيْمَنَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَدَقَّتِ الْبَابَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمِّ أَيْمَنَ: «إِنَّ هَذَا لَدَقُّ فَاطِمَةَ، وَلَقَدْ أَتَتْنَا فِي سَاعَةٍ مَا عَوَّدَتْنَا أَنْ تَأْتِيَنَا فِي مِثْلِهَا، فَقُومِي فَافْتَحِي لَهَا الْبَابَ» قَالَتْ: فَفَتَحْتُ لَهَا الْبَابَ، فَقَالَ: «يَا فَاطِمَةُ، لَقَدْ أَتَيْتِنَا فِي سَاعَةٍ مَا عَوَّدْتِنَا أَنْ تَأْتِينَا فِي مِثْلِهَا» فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ هَذِهِ الْمَلَائِكَةُ طَعَامُهَا التَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَالتَّمْجِيدُ، فَمَا طَعَامُنَا؟ قَالَ: «وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ مَا اقْتَبَسَ فِي آلِ مُحَمَّدٍ نَارٌ مُنْذُ ثَلَاثِينَ يَوْمًا وَقَدْ أَتَانَا أَعْنُزٌ فَإِنْ شِئْتِ أَمَرْتُ لَكِ بِخَمْسَةِ أَعْنُزٍ، وَإِنْ شِئْتِ عَلَّمْتُكَ خَمْسَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ آنِفًا» قَالَتْ: بَلْ عَلِّمْنِي الْخَمْسَ كَلِمَاتٍ الَّتِي عَلَّمَكَهُنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، قَالَ: ” قُولِي: يَا أَوَّلَ الْأَوَّلِينَ، يَا آخِرَ الْآخَرِينَ، ذَا الْقُوَّةِ الْمَتِينَ، وَيَا رَاحِمَ الْمَسَاكِينِ، وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ ” قَالَ: فَانْصَرَفَتْ حَتَّى دَخَلَتْ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَتْ: ذَهَبْتُ مِنْ عِنْدِكِ إِلَى الدُّنْيَا وَأَتَيْتُكَ بِالْآخِرَةِ، قَالَ: خَيْرًا يَأْتِيكِ، خَيْرًا يَأْتِيكِ