தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-9318

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

9318. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு இடத்தில் தங்கினோம். அங்கு உண்ணி பூச்சிகள் தொல்லை கொடுத்தன. அதனால் நாங்கள் அவற்றைத் திட்டினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றைத் திட்டாதீர்கள். அவை நல்ல பிராணி. ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்காக அவை, உங்களை எழுப்பின” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:

அஸ்பஃக் பின் நுபாதா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا هَاشِمُ بْنُ مَرْثَدٍ، نَا آدَمُ، نَا أَبُو يُوسُفَ الْقَاضِي، عَنْ سَعْدِ بْنِ طَرِيفٍ، عَنِ الْأَصْبَغِ بْنِ نُبَاتَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ:

نَزَلْنَا مَنْزِلًا فَآذَتْنَا الْبَرَاغِيثُ فَسَبَبْنَاهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوهَا؛ فَنِعْمَتِ الدَّابَّةُ؛ فَإِنَّهَا أَيْقَظَتْكُمْ لِذِكْرِ اللَّهِ»

لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ عَلِيٍّ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ آدَمُ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-9318.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9551.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . ஹாஷிம் பின் மர்ஸத்

3 . ஆதம் பின் அபூஇயாஸ்

4 . அபூயூஸுஃப் அல்காழீ

5 . ஸஃத் பின் தரீஃப்

6 . அஸ்பஃக் பின் நுபாதா

7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16963-ஸஃத் பின் தரீஃப் என்பவர் பற்றி, ஹாஷிம் பின் அப்துல்மலிக், அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அம்ர் பின் அலீ, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    திர்மிதீ போன்ற பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரிடமிருந்து யாரும் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்றும்; இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் முன்கருல் ஹதீஸ்; விடப்பட்டவர்; பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.
  • யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள், இவரின் செய்திகளை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்துவதற்கு மட்டுமே எழுதிக் கொள்ளவேண்டும். (ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்).
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் மிகவும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு தாஹிர் ஆகியோர், இவர் இட்டுக்கட்டக்கூடியவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் விடப்பட்டவர்; ராஃபிளிய்யா கொள்கையுடையவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/87, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/383, தஹ்தீபுத் தஹ்தீப்-1/693, தக்ரீபுத் தஹ்தீப்-1/369, 1/1186)


الضعفاء الكبير للعقيلي (2/ 120)
598 – سَعْدُ بْنُ طَرِيفٍ الْإِسْكَافُ كُوفِيٌّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ بَلْجٍ الرَّازِيُّ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَكَمِ بْنِ بَشِيرِ بْنِ سَلْمَانَ، يَسْأَلُ عَنْ سَعْدِ بْنِ طَرِيفٍ، فَقَالَ: هُوَ الْإِسْكَافُ قَالَ: وَكَانَ فِيهِ غُلُوٌّ فِي التَّشَيُّعِ.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ يَقُولُ: سَعْدُ بْنُ طَرِيفٍ لَيْسَ يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَرْوِيَ عَنْهُ،
وَقَالَ فِي مَوْضِعٍ آخَرَ: سَعْدُ بْنُ طَرِيفٍ لَيْسَ بِشَيْءٍ.
حَدَّثَنِي آدَمُ قَالَ: سَمِعْتُ الْبُخَارِيَّ قَالَ: سَعْدُ بْنُ طَرِيفٍ لَيْسَ بِالْقَوِيِّ عِنْدَهُمْ

الضعفاء الكبير للعقيلي (2/ 120)
وَمِنْ حَدِيثِهِ مَا حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ زَكَرِيَّا قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، خَتٌّ الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْحَارِثِ الْوَرَّاقُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سَعْدِ بْنِ طَرِيفٍ، عَنِ الْأَصْبَغِ بْنِ نُبَاتَةَ، عَنْ عَلِيٍّ قَالَ: بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَآذَتْنَا الْبَرَاغِيثُ فَسَبَبْنَاهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا الْبَرَاغِيثَ فَنِعْمَ الدَّابَّةُ دَابَّةٌ تُوقِظُكُمْ لِذِكْرِ اللَّهِ» فَبِتْنَا تِلْكَ اللَّيْلَةَ مُتَهَجِّدِينَ ”
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَحْمُودٍ قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرٍ الْأَعْيَنَ قَالَ: سَمِعْتُ أَبَا الْوَلِيدِ، يُضَعِّفُ سَعْدَ بْنَ طَرِيفٍ وَلَا يَثْبُتُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبَرَاغِيثِ شَيْءٌ

உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள், ஸஃத் பின் தரீஃப் என்பவர் பற்றிய குறிப்பில் இவரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ள தகவலை கூறிவிட்டு, இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியின் கருத்தில் வரும் எந்த செய்தியும் சரியானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ளுஅஃபாஉல் கபீர்-2/120)


  • மேலும் இதில் வரும் ராவீ-8131-அஸ்பஃக் பின் நுபாதா என்பவரை அபூபக்ர் பின் அய்யாஷ் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார்.
  • மேலும் பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் அலீ (ரலி) அவர்கள் மீது அளவுகடந்த அன்புக் கொண்டதால் பொய்யான செய்திகளை அறிவித்தார். எனவே இவர் விடப்பட்டவர் என்று கூறியுள்ளார். (சுருக்கம்)

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/183, தக்ரீபுத் தஹ்தீப்-1/151)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


2 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-9318,


மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1237.

தப்ரானீ இமாம்

أبو القاسم سليمان الطبراني

இறப்பு: ஹிஜ்ரி 360

தரம்: அல்ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: சுலைமான்

புனைப்பெயர்: அபூல்காஸிம், அல்ஹாஃபிழ்

பிறப்பு: ஹிஜ்ரி 260

இறப்பு: ஹிஜ்ரி 360

கால கட்டம்: பிற்கால அறிஞர்


வாழ்க்கைக் குறிப்பு

அல்ஹாஃபிழ் அபூல்காஸிம் சுலைமான் அத்தப்ரானீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 260 இல் பிறந்து ஹிஜ்ரி 360 இல் வஃபாத் ஆனார்கள். இவர் ஹதீஸ், தஃப்ஸீர், ஃபிஃக் போன்ற கலைகளில் சிறந்து விளங்கினார். இவர் ஒரு சிறந்த ஹதீஸ் கலை அறிஞர் ஆவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

வேறு பெயர்கள்: அல்ஹாஃபிழ் அபூல்காஸிம் சுலைமான் அத்தப்ரானீ, சுலைமான் அத்தப்ரானீ


ஆதாரம்: muslimscholars.info (40016) · Should verify

ஹாஷிம் பின் மர்ஸத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஆதம் பின் அபூஇயாஸ்

آدم بن أبي إياس

இறப்பு: ஹிஜ்ரி 221, அஸ்கலான்

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் அல்லது நாஹியா பின் ஷுஐப்

தந்தை பெயர்: அபூஇயாஸ்

வம்சம்: பனூ தமீம் அல்லது பனூ தைம் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூல் ஹஸன்

ஊர் பெயர்: குராஸான்

பயணித்த ஊர்கள்: குராஸான், அஸ்கலான், மர்வ், பக்தாத், ஷாம், ஹிஜாஸ், கூஃபா, பஸரா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 132, குராஸான்

இறப்பு: ஹிஜ்ரி 221, அஸ்கலான்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஆதம் பின் அபூஇயாஸ் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 132 ஆம் ஆண்டு குராஸான் நகரில் பிறந்தார். இவர் பலமானவர் ஆவார். இவர் பக்தாத், கூஃபா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, ஷாம் போன்ற பல நகரங்களுக்குப் பயணம் செய்து ஹதீஸ்களைக் கற்றார்.

இவர் ஹிஜ்ரி 221 ஆம் ஆண்டு அஸ்கலான் நகரில் காலமானார். இவர் ஷுஃபா இமாமிடம் ஹதீஸ்களை எழுதும் ஆறு அல்லது ஏழு பேரில் ஒருவராக இருந்தார். இவர் ஒரு சிறந்த வணக்கசாலியாகவும் நம்பகமானவராகவும் இருந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஷைபான் பின் அப்துர்ரஹ்மான், ஹம்மாத் பின் ஸலமா, அல்லைஸ் பின் ஸஃத், வர்காஃ பின் உமர், இஸ்ராயீல் பின் யூனுஸ், இஸ்மாயீல் பின் அய்யாஷ், அபூ ளம்ரா அனஸ் பின் அய்யாத், பகிய்யது பின் வலீத், ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ, ஹஃப்ஸ் பின் மைஸரா அஸ்ஸன்ஆனீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாரமீ, உபைது பின் ஆதம் பின் அபீ, அபூ ஹாதிம் அர்ராஸீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர், யஃகூப் அல்ஃபஸவீ, யஸீத் பின் முஹம்மத், இஸ்மாயீல் ஸமவைஹி, இஸ்ஹாக் பின் இஸ்மாயீல் அர்ரம்லீ, அஹ்மத் பின் அல்அஸ்ஹர் அன்னிஸாபூரீ, அஹ்மத் பின் அப்துல்லாஹ் அல்லைஹ்யானீ, இப்ராஹீம் பின் முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபர்யாபீ

வேறு பெயர்கள்: ஆதம் பின் அபூஇயாஸ், ஆதம் பின் அப்துர்ரஹ்மான், ஆதம்


ஆதாரம்: muslimscholars.info (20404) · Should verify

அபூயூஸுஃப் அல்காழீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸஃத் பின் தரீஃப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அஸ்பஃக் பின் நுபாதா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அலீ பின் அபூதாலிப் (ரலி)

அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி) – Ali ibn Abi Talib

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அலீ பின் அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப் பின் ஹாஷிம்

தந்தை பெயர்: அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 23, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் புனித தலமான கஅபாவில் பிறந்த ஒரே நபர் ஆவார். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிலேயே வளர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது, இஸ்லாத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் அவர்களும் ஒருவர்.

அவர்கள் இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவாக இருந்தார்கள். ஹிஜ்ரி 40 இல் கூஃபாவில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபாத்திமா பின்த் முஹம்மத், அல்மிக்ஃதாத் பின் அல்அஸ்வத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹஸன் பின் அலீ பின் அபூதாலிப், ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப், இப்னு மஸ்ஊத், அல்-பரா பின் ஆஸிப், அபூ ஹுரைரா, அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ, ஸஃபீனா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஜஃபர்

வேறு பெயர்கள்: அலீ, அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்


ஆதாரம்: muslimscholars.info (5) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.