தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-1237

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உண்ணி பூச்சிகளை சபிக்க வேண்டாம்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது உண்ணி பூச்சியை சபித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை சபிக்காதீர்!  ஏனெனில் நபிமார்களில் ஒரு நபியை தொழுகைக்காக அது எழுப்பியது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(al-adabul-mufrad-1237: 1237)

بَابُ لَا تَسُبُّوا الْبُرْغُوثَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا سُوَيْدٌ أَبُو حَاتِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

 أَنَّ رَجُلًا لَعَنَ بُرْغُوثًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-1237.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-1215.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்

3 . ஸஃப்வான் பின் ஈஸா

4 . ஸுவைத் பின் இப்ராஹீம்-அபூஹாதிம்

5 . கதாதா

6 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18877-ஸுவைத் பின் இப்ராஹீம் அல்ஜஹ்தரீ-அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    என்பவரை பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறிய தகவல் பலவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ஹாக் பின் மன்ஸூர், உஸ்மான் அத்தாரிமீ, அபூயஃலா ஆகியோர் இவர் சுமாரானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியதாக அறிவித்துள்ளனர். இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியதாக அறிவித்துள்ளனர்.
  • பஸ்ஸார் அவர்களும் இவரை சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.
  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அபூஸுர்ஆ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் பலமானவர்களிடமிருந்து இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் கதாதா அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகளில் அதிகம் தவறுள்ளது; கதாதா அவர்களிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை இவர் அறிவித்துள்ளார்; இவரை பலவீனமானவர் என்று முடிவு செய்வதே சரியானது என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் ஸதூக்-உண்மையாளர் தான் என்றாலும் இவரின் செய்திகளில் தவறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
  • தஹ்ரீர் நூலின் ஆசிரியர்கள், இவர் பலவீனமானவர் என்ற கருத்துக்கே முன்னுரிமை தந்துள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/237, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/485, தஹ்தீபுல் கமால்-12/242, அல்இக்மால்-6/162, தஹ்தீபுத் தஹ்தீப்-2/132, தக்ரீபுத் தஹ்தீப்-1/423, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-2687)


الضعفاء الكبير للعقيلي (2/ 158)
وَمِنْ حَدِيثِهِ مَا حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا طَالُوتُ بْنُ عَبَّادٍ قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ أَبُو حَاتِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا لَعَنَ بُرْغُوثًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ» وَلَا يَصِحُّ فِي الْبَرَاغِيثِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ

உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள், ஸுவைத்-அபூஹாதிம் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியைக் குறிப்பிட்டுவிட்டு இந்தக் கருத்தில் வரும் எந்த செய்தியும் சரியானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ளுஅஃபாஉல் கபீர்-2/152)


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுவைத் பின் இப்ராஹீம் —> கதாதா —> அனஸ் (ரலி) 

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1237, முஸ்னத் பஸ்ஸார்-7233, முஸ்னத் அபீ யஃலா-2959, 3120, அல்குனா வல்அஸ்மாஃ-தூலாபீ-783, அத்துஆ-தப்ரானீ-2056, ஷுஅபுல் ஈமான்-4816, 4817,


  • அல்குனா வல்அஸ்மாஃ-தூலாபீ-783.

الكنى والأسماء للدولابي (1/ 438)
783 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ سُوَيْدٍ أَبِي حَاتِمٍ، عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ: لَعَنَ رَجُلٌ بَرْغُوثًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا تَلْعَنْهُ؛ فَإِنَّهُ نَبَّهَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِصَلَاةِ الصُّبْحِ»


  • அத்துஆ-தப்ரானீ-2056.

الدعاء للطبراني (ص: 569)
2056 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَاشِمٍ الْبَغَوِيُّ، ثنا عَمَّارُ بْنُ هَارُونَ أَبُو يَاسِرٍ، ثنا سُوَيْدٌ أَبُو حَاتِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا لَعَنَ بُرْغُوثًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهُ فَإِنَّهُ نَبَّهَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


  • ஸயீத் பின் பஷீர் —> கதாதா —> அனஸ் (ரலி) 

பார்க்க: முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-2598, ஷுஅபுல் ஈமான்-4815,


  • முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-2598.

مسند الشاميين للطبراني (4/ 15)
2598 – حَدَّثَنَا مَسْعَدَةُ بْنُ سَعْدٍ الْعَطَّارُ الْمَكِّيُّ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، ثَنَا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ، ثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا، لَعَنْ بُرْغُوثًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸயீத் பின் பஷீர் பற்றி ஷுஃபா, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, பஸ்ஸார் போன்றோர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் இவர் கதாதா வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். இவ்வாறே இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஸாஜீ ஆகியோரும், இவர் கதாதா வழியாக மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் நினைவாற்றலில் குறையுள்ளவர்; என்றாலும் அதை பொறுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இவ்வாறே இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/8, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/412)

இவர் கதாதா அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தி சரியானதல்ல என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


2 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-9318.


 

5 comments on Al-Adabul-Mufrad-1237

  1. நாம் ஆராய்ச்சி செய்த வகையில் முன்னது சாமின் மட்டும் இந்த ஹதீஸை பதிவு செய்து இருப்பதாக தெரிகிறது ❗
    இந்த ஹதீஸின் தரம் என்ன❓
    இது வேற சங்கிலி தொடர்❗

    ٢٥٩٨ – حَدَّثَنَا مَسْعَدَةُ بْنُ سَعْدٍ الْعَطَّارُ الْمَكِّيُّ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، ثَنَا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ، ثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا، لَعَنْ بُرْغُوثًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»

    1. مسند الشاميين للطبراني (4/ 15):
      2598 – حَدَّثَنَا مَسْعَدَةُ بْنُ سَعْدٍ الْعَطَّارُ الْمَكِّيُّ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، ثَنَا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ، ثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا، لَعَنْ بُرْغُوثًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «‌لَا ‌تَلْعَنْهُ، ‌فَإِنَّهُ ‌أَيْقَظَ ‌نَبِيًّا ‌مِنَ ‌الْأَنْبِيَاءِ ‌لِلصَّلَاةِ»

      இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17234-ஸயீத் பின் பஷீர் பற்றி சிலர் பலமானவர் என்றும்; சிலர் சுமாரானவர் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும்; சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளனர்.(சுருக்கம்)
      இப்னு ஹஜர் அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
      (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/8, தக்ரீபுத் தஹ்தீப்-1/374)

      இந்தச் செய்தியை கதாதா அவர்களிடமிருந்து ஸுவைத், ஸயீத் பின் பஷீர் ஆகிய இருவர் மட்டுமே அறிவித்துள்ளனர். இருவர் பற்றியும் விமர்சனம் உள்ளது.

  2. Assalamu alaikum

    Narrated Tawus:

    The Messenger of Allah (ﷺ) used to place his right hand on his left hand, then he folded them strictly on his chest in prayer.

    Abi dawood 759

    இந்த ஹதீஸின் தரம் ?

    1. வ அலைக்கும் ஸலாம்.

      இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடர். என்றாலும் இந்தக் கருத்து வேறு சரியான செய்திகளில் உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.