தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23073

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று கூறுவது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பக்கூடியதாகும். அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அவனுக்கே உரியது என்று கூறுவது) நன்மையின் தராசு முழுவதையும் நிரப்பக்கூடியதாகும். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறுவது) வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். நோன்பு வைப்பது பொறுமையில் பாதியாகும். தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் கைவிரல்களால் அல்லது என்னுடைய கைவிரல்களால் எண்ணி மேற்கண்ட ஐந்து செய்திகளைக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.

(முஸ்னது அஹ்மத்: 23073)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ جُرَيَّ بْنَ كُلَيْبٍ النَّهْدِيَّ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُلَيْمٍ، قَالَ:

عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِي، أَوْ فِي يَدِهِ: «التَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ لِلَّهِ يَمْلَؤُهُ، وَالتَّكْبِيرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الْإِيمَانِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23073.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-3519 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.