ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு தொழுகை விரிப்பில் தொழ விரும்பி, அடிமைப் பெண்ணிடம் (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு! என்று சொன்னார்கள். அதற்கு நான், அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், மாதவிடாய் என்பது அவளது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 24747)حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، قَالَ: حَدَّثَنَا السُّدِّيُّ، عَنْ عَبْدِ اللَّهِ الْبَهِيِّ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي الْمَسْجِدِ، فَقَالَ لِلْجَارِيَةِ: «نَاوِلِينِي الْخُمْرَةَ» ، قَالَتْ: أَرَادَ أَنْ يَبْسُطَهَا، فَيُصَلِّيَ عَلَيْهَا، قَالَتْ: إِنَّهَا حَائِضٌ، قَالَ: «إِنَّ حَيْضَهَا لَيْسَ فِي يَدِهَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24747.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24186.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் யஸார் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். மேலும் ஸுத்தீ என்ற இஸ்மாயீல் பின் அப்துர்ரஹ்மான் அவர்களையும் சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இந்த செய்தியை மற்ற பலமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதால் இது ஷாத் அல்லது முன்கர் என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-134 .
சமீப விமர்சனங்கள்