ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள், (முஹாஜிர்) பெண்களுக்கு (அவர்களின் கணவன் இறந்துவிட்டால்) அவர்கள் வசித்த வீட்டையே வாரிசாக்கினார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 27049)حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ كُلْثُومٍ، عَنْ زَيْنَبَ،
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَّثَ النِّسَاءَ خِطَطَهُنَّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27049.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26421.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர்; அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து பலமான அறிவிப்பாளரான அப்துல்வாஹித் பின் ஸியாத் விரிவாக அறிவித்துள்ளார்.
(பார்க்க: அஹ்மத்-27050 )
மேலும் பார்க்க: அபூதாவூத்-3080 .
சமீப விமர்சனங்கள்