தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27050

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கருகில் உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மனைவியும், சில முஹாஜிர் பெண்களும் இருந்தனர். அவர்கள், தங்களின் வீடுகள் இடநெருக்கடியாக இருப்பதையும்; (கணவன் இறந்தப் பின்) வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறோம்; அதனால் சிரமத்திற்குள்ளாகிறோம் என்றும் முறையிட்டனர். எனவே ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தலையை விட்டு விட்டு பேச ஆரம்பித்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், நீ கண்ணால் பேசவில்லையே! உன் வேலையை செய்துக்கொண்டே பேசு! என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர் ஆண்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு அவர்களின் மனைவிகள் வாரிசாக வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இறந்த போது மதீனாவில் இருந்த அவரின் வீட்டிற்கு அவரின் மனைவி (ஸைனப் பின்த் அப்துல்லாஹ்-ரலி) வாரிசாக ஆனார்.

அறிவிப்பவர்: குல்ஸூம் பின்த் அல்கமா (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 27050)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ كُلْثُومٍ قَالَ:

كَانَتْ زَيْنَبُ تَفْلِي رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدَهُ امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ، وَنِسَاءٌ مِنَ الْمُهَاجِرَاتِ يَشْكُونَ مَنَازِلَهُنَّ، وَأَنَّهُنَّ يَخْرُجْنَ مِنْهُ، وَيُضَيَّقُ عَلَيْهِنَّ فِيهِ، فَتَكَلَّمَتْ زَيْنَبُ، وَتَرَكَتْ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكِ لَسْتِ تَكَلَّمِينَ بِعَيْنَيْكِ، تَكَلَّمِي وَاعْمَلِي عَمَلَكِ» . فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ أَنْ يُوَرَّثَ مِنَ الْمُهَاجِرِينَ النِّسَاءُ «فَمَاتَ عَبْدُ اللَّهِ، فَوَرِثَتْهُ امْرَأَتُهُ دَارًا بِالْمَدِينَةِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27050.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26422.




மேலும் பார்க்க: அபூதாவூத்-3080 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.