தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27484

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெற்றோருக்கு) மாறு செய்பவன்; (சூனியத்தை உண்மை என்று நம்புபவன்); நிரந்தரமாக மது அருந்துபவன்; விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 27484)

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ، قَالَ: سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ، عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، (وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ) وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-26212.
Musnad-Ahmad-Shamila-27484.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26833.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18414-அபுர் ரபீஉ-ஸுலைமான் பின் உத்பா பற்றி அபூமுஸ்ஹிர், ஹைஸம் பின் காரிஜா, துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    ஹிஷாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அபூஸுர்ஆ போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்றோர் ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/103)

  • இவரை நான் அறியவில்லை என்று இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    கூறியுள்ளார். பல அறிஞர்கள் ‘ஸுலைமான் பின் உத்பா” அவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளதால் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், நான் அறியவில்லை என்று கூறியிருப்பது விமர்சனம் ஆகாது.
  • இமாம் யஹ்யா பின் மயீன் மட்டுமே இவர் தொடர்பாக ‘லைஸ பிஷையின்” என்றும் சில நூற்களில் ‘லா ஷைஉன்” என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/103)

இமாம் யஹ்யா பின் மயீன் ஒரு அறிவிப்பாளர் விசயத்தில் மேற்கண்ட வார்த்தைகளைக் கூறினால் அவர் பலவீனமானர் என்று நாம் எல்லா இடங்களிலும் முடிவு செய்ய முடியாது. யாராலும் குறைகூறப்படாத மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களைக் கூட இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் ‘லைஸ பி ஸையின்” (இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை) என்று விமர்சித்துள்ளார்கள். இதனை இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர் தமது ஃபத்ஹுல் பாரி என்ற நூலின் முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

(فتح الباري لابن حجر )

وَذكر بن الْقطَّان الفاسي أَن مُرَاد بن معِين بقوله فِي بعض الرِّوَايَات لَيْسَ بِشَيْء يَعْنِي أَن أَحَادِيثه قَليلَة جدا

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் சில அறிவிப்பாளர்கள் தொடர்பாக ‘லைஸ பிஷையின்” என்று கூறினால் ‘அந்த அறிவிப்பாளரின் ஹதீஸ்கள் மிகக் குறைவானவை” என்ற கருத்தையே அவர் நாடுகிறார். இதனை இப்னுல் கத்தான் அல்ஃபாஸி அவர்கள் கூறியுள்ளார்.

நூல் : ஃபத்ஹூல் பாரீ முன்னுரை

  • இவர் மறுக்கத்தக்க சில செய்திகளை அறிவித்துள்ளார் என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அல்ஜஸரா அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/103)

இதை வைத்து இவரை பலவீனமானவர் என்று கருத முடியாது. ஏனெனில் எத்தனையோ உறுதியான அறிவிப்பாளர்கள் சில மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளனர். அதனை வைத்து அவர்களை பலவீனமானவர்கள் என்று யாரும் முடிவு செய்யவில்லை.

  • தற்கால அறிஞர்களில் ஒருவரான ‘ஷுஐப் அர்னாவூத்” அவர்கள் ஸுலைமான் பின் உத்பா அவர்கள் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இது ஏற்கத் தகுந்த விமர்சனம் அல்ல. ஏனெனில் ஸுலைமான் பின் உத்பா அவர்கள் மீது எந்த அறிஞரும் குறை கூறவில்லை. இந்நிலையில் அவர் தனித்து அறிவித்தால் ஏற்க முடியாது என்ற விமர்ச்சனம் ஏற்கத்தகுந்தது அல்ல என்பது தெளிவாகிறது. எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஹதீஸ்கலை விதிகளின் அடிப்படையில் ஸஹீஹ் என்ற முதல் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27484 , இப்னு மாஜா-3376 , முஸ்னத் பஸ்ஸார்-4106 ,

2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11107 .

3 . அபூமூஸா …

4 . ஷஹ்ர் பின் ஹவ்ஷப்…

கூடுதல் தகவல் பார்க்க: 1 . சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) .

2 . இது பலவீனமானதா? .

10 comments on Musnad-Ahmad-27484

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) என்ற நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் () பிராக்கெட் இல்லை நீங்கள் () பிராக்கெட் போட்டுள்ளீர்கள், இப்னு மாஜா-3376 , முஸ்னத் பஸ்ஸார்-4106 ஆகிய ஹதீஸ்களில் وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ சூனியத்தை உண்மை என்று நம்புபவன் என்ற வாசகமே இல்லை. என்ன காரணம் விளக்கவும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      தற்போது உள்ள முஸ்னத் அஹ்மதின் பிரதிகளில் இது விடுபட்டுள்ளது. அதைப் பற்றிய விவரம் சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) என்ற கட்டுரையில் உள்ளது என்பதால் அடையாளப்படுத்தவே () பிராக்கெட் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள தகவலே உங்கள் அனைத்து கேள்விக்கும் பதிலாகும்.

  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    “சூனியத்தை உண்மையென்று நம்புபவன்” என்ற வாசகம் அரபு மூலத்தில் இல்லை; மாறாக “சூனியத்தை நம்பியவன்” என்று தான் இருக்கிறது. விளக்கம் தேவை சகோ?

  3. வ அலைக்கும் ஸலாம்.

    கூடுதல் தகவல் பார்க்க: 1 . சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) .

    இந்த தகவலைப் பார்க்கவும்.

  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    மொழியாக்கம் என்பது வேறு விளக்கம் என்பது வேறு இதற்கு சரியான மொழியாக்கம் சூனியத்தை ஈமான் கொண்டவர் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அல்லாஹ்வை ஈமான் கொள்வது போல் ஈமான் கொள்வது, தனக்கு நல்லதோ கெட்டதோ சூனியத்தால் மட்டுமே நடக்கும் என்று நம்புவது. இது சூனியம் செய்பவர்களையும், சூனியத்தை நாடி செல்பவர்களையே குறிக்கும் . ஆனால் சூனியத்தால் தாக்கம் செலுத்த முடியும் என்ற அர்த்தத்தை மட்டுமே எடுத்து அந்த கட்டுரையை நீங்கள் எழுதி உள்ளீர்கள்.

    “ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்” என்று அய்யுப் நபி கூறினார்கள் சைத்தான் பாதிப்பை ஏற்படுத்துவான் என்று கூறுவது இணைவைப்பு ஆகாது.

    தொற்றுநோய் என்பது கிடையாது என்று ஹதீஸ் வருகிறது ஆனால் விளக்கம் தொற்றுநோயை நம்பி அல்லாஹ் ஏற்படுத்திய விதியை மறுக்ககூடாது என்பதே விளக்கம் , அதற்கு தான் அடுத்த செய்தியாக விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் என்று வருகிறது.

  5. அஸ்ஸலாமு அலைக்கும்.

    مسند أحمد (17/ 179 ط الرسالة):
    قوله: “‌ولا ‌مؤمن ‌بسحر”، أي: مصدق به، أو من ملتبس بعمل السحر

    இந்த வார்த்தைக்கு ஷுஐப் அவர்கள், முஸத்திக் பிஹீ-உண்மைபடுத்தக்கூடியவர் என்ற பொருளைக் கூறியுள்ளார் என்பதைப் பார்க்கவும்.

  6. அஸ்ஸலாமு அலைக்கும்

    முஸத்திக் பிஹீ என்று ஹதீஸின் மூலத்தில் வந்துள்ளதா சகோ?

  7. வ அலைக்கும் ஸலாம். மூலத்தில் இருந்தால் அதைக் கூறியிருப்போம். அதற்கு கூறப்படும் விளக்கத்தைத் தான் உங்களுக்கு தெரிவித்துள்ளோம்.

  8. 1)சகோ, மூலத்தில் இல்லாத கூடுதல் விளக்கத்திற்காக பயன்படுத்தும் வார்த்தையை ( ) பிராக்கேட்டில் பயன்படுத்தினால் வேறுபடுத்தி பார்க்க வசதியாக இருக்கும்.

    2)ஷுஐப் அவர்கள், முஸத்திக் பிஹீ-உண்மைபடுத்தக்கூடியவர் என்ற பொருளைக் கூறியுள்ளார் .என்று சொல்கிறீர்கள் ஷுஐப் அவர்கள் சூனியத்தால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியாது என்ற நிலைபாட்டில் உள்ளவரா?

  9. முஸத்திக் பிஹீ-உண்மைபடுத்தக்கூடியவர் என்றால் என்ன என்பதை விளக்கவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.