தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27609

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

27609. யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

அஸ்மா பின்த் யஸீத் (ரலி)

أسماء بنت يزيد بن السكن

இறப்பு: ஹிஜ்ரி 63, திமிஷ்க்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அஸ்மா அல்லது ஃபுகைஹா பின்த் யஸீத்

தந்தை பெயர்: யஸீத் பின் அஸ்ஸகன்

வம்சம்: பனூ அப்துல் அஷ்ஹல்

புனைப்பெயர்: உம்மு ஆமிர், உம்மு ஸலமா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, திமிஷ்க்

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 63, திமிஷ்க்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அஸ்மா பின்த் யஸீத் ரலி அவர்கள் சிறந்த அறிவும், நாவன்மையும் கொண்ட நபித்தோழியாவார். அவர்கள் "பெண்களின் பேச்சாளர்" என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் 81 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.

மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்களுடன் சென்றார்கள். யர்மூக் போரில் கலந்துகொண்டு, தனது கூடாரத்தின் கம்பத்தால் ஒன்பது எதிரி வீரர்களைக் கொன்றார்கள். அவர்கள் திமிஷ்க் நகரில் வாழ்ந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மஹ்மூத் பின் அம்ர் பின் யஸீத் பின் அஸ்ஸகன், ஷஹ்ர் பின் ஹவ்ஷப், முஹாஜிர் பின் அபூ முஸ்லிம், இஸ்ஹாக் பின் ராஷித், முஜாஹித், அபூ ஸுஃப்யான் மவ்லா இப்னு அபீ அஹ்மத், அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் அஸ்ஸாமித்

வேறு பெயர்கள்: ஃபுகைஹா பின்த் யஸீத், உம்மு ஆமிர், உம்மு ஸலமா


ஆதாரம்: muslimscholars.info (84) · Should verify


حَدَّثَنَا عَارِمٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْغِيبَةِ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27609.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26949.



  • இதன் அறிவிப்பாளர்தொடரிலும் வரும் உபைதுல்லாஹ் பின் அபூஸியாத் , ஷஹ்ர் பின் ஹவ்ஷப் போன்றோர் பலவீனமானவர்கள்…

மேலும் பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1737 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.