தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2821

---


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.  ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இந்த வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை” என்று கூறினார்கள்.

தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

“மாஷித்தா பிர்அவ்னின் குடும்பத்துப் பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண். ஒரு நாள் அவர் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக் கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது. உடனே மாஷித்தா “பிஸ்மில்லாஹ்- அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு” என்று கூறினார். அப்போது அந்தப் பிள்ளை “நீ அல்லாஹ் என்று கூறியது என் தந்தை பிர்அவ்னைத் தானே?” என்று வினவினாள். அதற்கு மாஷித்தா “இல்லை! என்னையும், உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ்வை” என்று கூறினார்.

மாஷித்தா, வணக்கத்திற்குரிய நாயனாக அல்லாஹ்வையும், இறைத்தூதராக நபி மூஸா (அலை) அவர்களையும் ஈமான் கொண்டு அதை மனதில் மறைத்து வைத்திருந்த பெண்ணாவார்.

உடனே அந்தப் பிள்ளை போய் தன் தந்தை பிர்அவ்னிடம் குற்றஞ் சொல்ல அவன் மாஷித்தாவை சபைக்கு அழைத்து முழு விஷயத்தையும் வினவினான். பிர்அவ்ன் கேட்டான் “என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?” என்று. அதற்கு மாஷித்தா “ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்தான் என் இறைவன்” என்றார் உறுதியோடு.

கோபங்கொண்ட பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க வைத்து மாஷித்தாவுடைய கணவனிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பிள்ளைகளாக நெருப்பில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷித்தா மனந்தளறவுமில்லை, அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.

கடைசியாக பிர்அவ்ன் மாஷித்தாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும் தூக்கி எறியும்படி கூறினான். அப்போது மாஷித்தா “எனது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது” என்று கூறினார். பிர்அவ்ன் “என்ன, சொல்?” என்று கேட்டான். மாஷித்தா “என்னையும் என் கைக்குழந்தையையும் எண்ணையில் தூக்கி எறிந்த பின் கடைசியாக எமது எலும்புகள் எதுவெல்லாம் மிச்சமாகுமோ அவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு புடவையினுள் சுற்றி ஒரே கப்றில் அடக்கஞ் செய்ய வேண்டும்” என்று.

கொடிய பிர்அவ்ன் மாஷித்தாவுடைய வேண்டுகோளிற்கு இணக்கம் தெரிவித்தான். அப்போது மாஷித்தா தன் மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையைப் பார்த்து “ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே” என்று தயங்கினார். அப்போது வல்ல அல்லாஹ் அந்தக் குழந்தைக்கு பேசும் சக்தியைக் கொடுத்தான். அக்குழந்தை “கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமை கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும் தண்டனைகளும் இதை விடக் கொடியது” என்று ஆறுதல் கூறியது. கடைசியில் மாஷித்தாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில் எறியப்பட்டார்கள்.

வல்லவன் அல்லாஹ் மாஷித்தாவையும் அவருடைய குடும்பத்தையும் பொருந்திக் கொண்டு வாக்களித்த உயர்ந்த சுவர்க்கத்தை அளித்து விட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்:

குழந்தைப் பருவத்தில் நால்வர் பேசியுள்ளனர். 1. ஈஸா நபி, 2. ஜுரைஜ் என்பாரின் தோழர், 3. யூசுஃப் நபிக்கு ஆதரவாக சாட்சி சொன்னவர், 4. ஃபிர் அவ்னின் மகளாகிய மாஷிதாவின் மகன்.

 

(முஸ்னது அஹ்மத்: 2821)

حَدَّثَنَا أَبُو عُمَرَ الضَّرِيرُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَمَّا كَانَتِ اللَّيْلَةُ الَّتِي أُسْرِيَ بِي فِيهَا، أَتَتْ عَلَيَّ رَائِحَةٌ طَيِّبَةٌ، فَقُلْتُ: يَا جِبْرِيلُ، مَا هَذِهِ الرَّائِحَةُ الطَّيِّبَةُ؟ فَقَالَ: هَذِهِ رَائِحَةُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ وَأَوْلادِهَا “. قَالَ: ” قُلْتُ: وَمَا شَأْنُهَا؟ قَالَ: بَيْنَا هِيَ تُمَشِّطُ ابْنَةَ فِرْعَوْنَ ذَاتَ يَوْمٍ، إِذْ سَقَطَتِ الْمِدْرَى مِنْ يَدَيْهَا، فَقَالَتْ: بِسْمِ اللَّهِ. فَقَالَتْ لَهَا ابْنَةُ فِرْعَوْنَ: أَبِي؟ قَالَتْ: لَا، وَلَكِنْ رَبِّي وَرَبُّ أَبِيكِ اللَّهُ. قَالَتْ: أُخْبِرُهُ بِذَلِكَ قَالَتْ: نَعَمْ. فَأَخْبَرَتْهُ فَدَعَاهَا، فَقَالَ: يَا فُلانَةُ، وَإِنَّ لَكِ رَبًّا غَيْرِي؟ قَالَتْ: نَعَمْ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ. فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاسٍ فَأُحْمِيَتْ، ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى هِيَ وَأَوْلادُهَا فِيهَا، قَالَتْ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً. قَالَ: وَمَا حَاجَتُكِ؟ قَالَتْ: أُحِبُّ أَنْ تَجْمَعَ عِظَامِي وَعِظَامَ وَلَدِي فِي ثَوْبٍ وَاحِدٍ، وَتَدْفِنَنَا. قَالَ: ذَلِكَ لَكِ عَلَيْنَا مِنَ الحَقِّ “. قَالَ: ” فَأَمَرَ بِأَوْلادِهَا فَأُلْقُوا بَيْنَ يَدَيْهَا، وَاحِدًا وَاحِدًا، إِلَى أَنِ انْتَهَى ذَلِكَ إِلَى صَبِيٍّ لَهَا مُرْضَعٍ، كَأَنَّهَا تَقَاعَسَتْ مِنْ أَجْلِهِ، قَالَ: يَا أُمَّهْ، اقْتَحِمِي، فَإِنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ، فَاقْتَحَمَتْ “

قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: ” تَكَلَّمَ أَرْبَعَةٌ صِغَارٌ: عِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ السَّلامُ، وَصَاحِبُ جُرَيْجٍ، وَشَاهِدُ يُوسُفَ، وَابْنُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-2822.
Musnad-Ahmad-Shamila-2821.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2715.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளை குழம்பியவர் ஆவார். இவர் மூளை குழம்புவதற்கு முன் ஹம்மாத் பின் ஸலமா இவரிடமிருந்து ஹதீஸை கேட்டுள்ளதால் இதில் பிரச்சனை இல்லை.

1 . ஆனால் ஸயீத் பின் ஜுபைர் அவர்கள், நபியின் கூற்றாகச் சொல்லாமல் நபித்தோழரின் கூற்றாகச் சொன்ன பல செய்திகளை நபியின் கூற்றாக அதாஉ பின் ஸாயிப் அறிவித்துள்ளார் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹம்பல் விமர்சித்துள்ளார்கள். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/319)

மேற்கண்ட செய்தியை ஸயீத் பின் ஜுபைர் வழியாகவே அதாஉ பின் ஸாயிப் அறிவித்துள்ளதால் இது நபித்தோழரின் கூற்றாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

2 . மேலும் புகாரி-3436 . இல் மூன்று பேரைத் தவிர யாரும் குழந்தைப் பருவத்தில் பேசியதில்லை என்று வந்துள்ளது. ஆனால் மேற்கண்ட செய்தியில் நால்வர் என வந்துள்ளது. எண்ணிக்கையில் ஒன்று அதிகமாவது மட்டுமின்றி மூன்றாம் நபருக்குப் பதில் வேறு நபர் பற்றி மாற்றிக் கூறப்படுகிறது.

எனவே புகாரியில் பதிவாகியுள்ள இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு இது முரணாக இருப்பதாலும் இந்த செய்தி பலவீனமானதாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . பார்க்க : அஹ்மத்-2821 , 2822 , 2823 , முஸ்னத் பஸ்ஸார்-5067 , முஸ்னத் அபீ யஃலா-2517 , இப்னு ஹிப்பான்-2903 , 2904 , அல்முஃஜமுல் கபீர்-12279 , 12280 , ஹாகிம்-3835 , ஷுஅபுல் ஈமான்-1519 ,

2 . இப்னு மாஜா-4030 .

கூடுதல் தகவல் பார்க்க: குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்? .

more…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.