தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3895

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின்) முதலிரண்டு ரக்அத்களின் முடிவில் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள் என்று (எனது தந்தை) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், நபி (ஸல்) அவர்கள் நிலைக்கு எழும்வரை இவ்வாறு தானா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம் இவ்வாறு தான் இருப்பார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉபைதா-ஆமிர் பின் அப்துல்லாஹ் (ரஹ்).

(முஸ்னது அஹ்மத்: 3895)

حَدَّثَنَا عَفَّانُ، وَبَهْزٌ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنِي، قَالَ: سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ، يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كَانَ فِي الرَّكْعَتَيْنِ الْأُوَلَتَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ» ، قُلْتُ: حَتَّى يَقُومَ؟ قَالَ: حَتَّى يَقُومَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-3700.
Musnad-Ahmad-Shamila-3895.
Musnad-Ahmad-Alamiah-3700.
Musnad-Ahmad-JawamiulKalim-3763.




  • இது முன்கதிஃயான செய்தி. காரணம் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து, அவர்களின் மகன் அபூஉபைதா (ரஹ்) அவர்கள் எந்த ஹதீஸையும் கேட்கவில்லை.

பார்க்க: தஹ்தீபுல் கமால் 14/61.


மேலும் பார்க்க: திர்மிதீ-366

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.