குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 3948)حَدَّثَنَا أَسْوَدُ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنِ الْحَسَنِ بْنِ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ الْمُؤْمِنَ لَيْسَ بِاللَّعَّانِ، وَلَا الطَّعَّانِ، وَلَا الْفَاحِشِ، وَلَا الْبَذِيءِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3948.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3818.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1833-அபூபக்ர் பின் அய்யாஷ் பற்றி இப்னு முபாரக் பாராட்டியுள்ளார்.
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.பலமானவர் என்று கூறியுள்ளார். - இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள் இவர் அஃமஷ் வழியாக அறிவிப்பது பலவீனமானது என்று கூறியுள்ளார். - உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இவர் கூஃபாவாசிகளிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். - இவர் வயதான காலத்தில் ஞாபகமறதியால் சில செய்திகளை தவறாக அறிவித்ததால் இப்னுல் கத்தான், இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
போன்றோர் இவரை நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர்.
(நூல்: அஸ்ஸிகாத்-7/668)
இந்தச் செய்தியில் அபூபக்ர் பின் அய்யாஷ் அவர்களின் ஆசிரியராக இடம்பெற்றிருப்பவர் கூஃபாவாசியான ஹஸன் பின் அம்ர் என்பவர் ஆவார். எனவே இந்தச் செய்தியை சிலர் ஹஸன் தரம் என்று கூறியிருந்தாலும் இது நபித்தோழரின் கூற்றாக வந்துள்ள செய்திகளே சரியாக உள்ளன.
மேலும் பார்க்க: திர்மிதீ-1977.
சமீப விமர்சனங்கள்