அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அடக்கத்தலத்தை கடந்து சென்றார்கள். அப்போது இதன் குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக இந்த மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது என்று கூறினார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்.
(இதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் அபூஅப்துர்ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்களை மன்னிப்பானாக! அவர் தவறாக விளங்கிக்கொண்டார்; ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்று அல்லாஹ் கூறுகிறான் என்று கூறிவிட்டு, இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த சிறிய, பெரிய) பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 4865)حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرٍ فَقَالَ: «إِنَّ هَذَا لَيُعَذَّبُ الْآنَ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» فَقَالَتْ عَائِشَةُ: غَفَرَ اللَّهُ لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ إِنَّهُ وَهِلَ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ [ص:471] أُخْرَى} [الأنعام: 164] ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا لَيُعَذَّبُ الْآنَ وَأَهْلُهُ يَبْكُونَ عَلَيْهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-4865.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4725.
சமீப விமர்சனங்கள்