தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5175

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை செய்தார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறினார்:

நான், இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘கஸஉ’ என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒருவர் சிறுவனின் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்து விட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்’ என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 5175)

حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ نَافِعٍ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:

نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ

قُلْتُ: وَمَا الْقَزَعُ، قَالَ: أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ وَيُتْرَكَ بَعْضُهُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5175.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5029.




மேலும் பார்க்க : புகாரி-5920 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.