தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6168

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதிகமாக பேசினார்கள். (முதலில்) வீட்டில் நிலைப்பெற்றுவிடும் (அஹ்லாஸ் எனும்) குழப்பம் ஏற்படும் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அஹ்லாஸ் எனும் குழப்பம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், மக்களிடையில் வெறுப்பும், விரோதமும் ஏற்படும். கொலை, கொள்ளை பெருகிவிடும். அதனால் மக்களிடையே சண்டை ஏற்பட்டு மக்கள் வெருண்டோடுவார்கள் என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு செல்வ செழிப்பினால் குழப்பம் ஏற்படும். அதனுடைய (ஆரம்பம் எனும்) புகை எனது குடும்பத்தாரைச் சேர்ந்த மனிதரின் காலிலிருந்து உருவாகும். அவர் என்னைச் சேர்ந்தவர் என்று அவர் கருதிக் கொள்வார். ஆனால் அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல. என்னுடைய நேசர்கள் யாரெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களே!

பின்பு மக்கள், விலா எழும்பின் மீதுள்ள … போன்று (உறுதியில்லாத)  ஒரு மனிதரின் தலைமையின் கீழ் ஒன்று சேர்வார்கள். பின்பு (துஹைமா எனும்) இருள்சூழ்ந்த குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பம் இந்த சமுதாயத்தில் எவரையும் விட்டுவிடாது. அது முடிந்து விட்டது என்று கூறப்பட்டாலும் மீண்டும் அது அதிகமாகிவிடும். அப்போது ஒரு மனிதன் காலையில் முஃமினாக-இறைநம்பிக்கையாளனாக இருப்பான். மாலையில் காஃபிராக மாறிவிடுவான்.

இறுதியில் மக்கள் இரு பிரிவினராக மாறிவிடுவார்கள். ஒரு பிரிவினரிடம் ஈமான் இருந்து நயவஞ்சகம் இருக்காது. மற்றொரு பிரிவினரிடம் நயவஞ்சகம் இருந்து ஈமான் இருக்காது. இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் அந்த நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ தஜ்ஜால் வெளிப்படுவதை எதிர்பாருங்கள்.

(முஸ்னது அஹ்மத்: 6168)

حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، حَدَّثَنِي الْعَلَاءُ بْنُ عُتْبَةَ الْحِمْصِيُّ أَوِ الْيَحْصُبِيُّ، عَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ الْعَنْسِيِّ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ:

كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُعُودًا، فَذَكَرَ الْفِتَنَ، فَأَكْثَرَ ذِكْرَهَا حَتَّى ذَكَرَ فِتْنَةَ الْأَحْلَاسِ، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا فِتْنَةُ الْأَحْلَاسِ؟ قَالَ: ” هِيَ فِتْنَةُ هَرَبٍ وَحَرَبٍ، ثُمَّ فِتْنَةُ السَّرَّاءِ، دَخَلُهَا أَوْ دَخَنُهَا مِنْ تَحْتِ قَدَمَيْ رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي، يَزْعُمُ أَنَّهُ مِنِّي، وَلَيْسَ مِنِّي، إِنَّمَا وَلِيِّيَ الْمُتَّقُونَ، ثُمَّ يَصْطَلِحُ النَّاسُ عَلَى رَجُلٍ كَوَرِكٍ عَلَى ضِلَعٍ، ثُمَّ فِتْنَةُ الدُّهَيْمَاءِ لَا تَدَعُ أَحَدًا مِنْ هَذِهِ الْأُمَّةِ إِلَّا لَطَمَتْهُ لَطْمَةً، فَإِذَا قِيلَ: انْقَطَعَتْ تَمَادَتْ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، حَتَّى يَصِيرَ النَّاسُ إِلَى فُسْطَاطَيْنِ، فُسْطَاطُ إِيمَانٍ لَا نِفَاقَ فِيهِ، وَفُسْطَاطُ نِفَاقٍ لَا إِيمَانَ فِيهِ، إِذَا كَانَ ذَاكُمْ فَانْتَظِرُوا الدَّجَّالَ مِنَ الْيَوْمِ أَوْ غَدٍ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6168.
Musnad-Ahmad-Alamiah-3704.
Musnad-Ahmad-JawamiulKalim-5999.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ்

3 . அப்துல்லாஹ் பின் ஸாலிம்

4 . அலாஉ பின் உத்பா

5 . உமைர் பின் ஹானிஃ

6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


மேலும் பார்க்க: அபூதாவூத்-4242.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.