தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4242

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதிகமாக பேசினார்கள். (முதலில்) வீட்டில் நிலைப்பெற்றுவிடும் (அஹ்லாஸ் எனும்) குழப்பம் ஏற்படும் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அஹ்லாஸ் எனும் குழப்பம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், மக்களிடையில் வெறுப்பும், விரோதமும் ஏற்படும். கொலை, கொள்ளை பெருகிவிடும். அதனால் மக்களிடையே சண்டை ஏற்பட்டு மக்கள் வெருண்டோடுவார்கள் என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு செல்வ செழிப்பினால் குழப்பம் ஏற்படும். அதனுடைய (ஆரம்பம் எனும்) புகை எனது குடும்பத்தாரைச் சேர்ந்த மனிதரின் காலிலிருந்து உருவாகும். அவர் என்னைச் சேர்ந்தவர் என்று அவர் கருதிக் கொள்வார். ஆனால் அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல. என்னுடைய நேசர்கள் யாரெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களே!

பின்பு மக்கள், விலா எழும்பின் மீதுள்ள … போன்று (உறுதியில்லாத)  ஒரு மனிதரின் தலைமையின் கீழ் ஒன்று சேர்வார்கள். பின்பு (துஹைமா எனும்) இருள்சூழ்ந்த குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பம் இந்த சமுதாயத்தில் எவரையும் விட்டுவிடாது. அது முடிந்து விட்டது என்று கூறப்பட்டாலும் மீண்டும் அது அதிகமாகிவிடும். அப்போது ஒரு மனிதன் காலையில் முஃமினாக-இறைநம்பிக்கையாளனாக இருப்பான். மாலையில் காஃபிராக மாறிவிடுவான்.

இறுதியில் மக்கள் இரு பிரிவினராக மாறிவிடுவார்கள். ஒரு பிரிவினரிடம் ஈமான் இருந்து நயவஞ்சகம் இருக்காது. மற்றொரு பிரிவினரிடம் நயவஞ்சகம் இருந்து ஈமான் இருக்காது. இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் அந்த நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ தஜ்ஜால் வெளிப்படுவதை எதிர்பாருங்கள்.

(அபூதாவூத்: 4242)

حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، حَدَّثَنِي الْعَلَاءُ بْنُ عُتْبَةَ، عَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ الْعَنْسِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ:

كُنَّا قُعُودًا عِنْدَ رَسُولِ اللَّهِ، فَذَكَرَ الْفِتَنَ فَأَكْثَرَ فِي ذِكْرِهَا حَتَّى ذَكَرَ فِتْنَةَ الْأَحْلَاسِ، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ وَمَا فِتْنَةُ الْأَحْلَاسِ؟ قَالَ: ” هِيَ هَرَبٌ وَحَرْبٌ، ثُمَّ فِتْنَةُ السَّرَّاءِ، دَخَنُهَا مِنْ تَحْتِ قَدَمَيْ رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي يَزْعُمُ أَنَّهُ مِنِّي، وَلَيْسَ مِنِّي، وَإِنَّمَا أَوْلِيَائِي الْمُتَّقُونَ، ثُمَّ يَصْطَلِحُ النَّاسُ عَلَى رَجُلٍ كَوَرِكٍ عَلَى ضِلَعٍ، ثُمَّ فِتْنَةُ الدُّهَيْمَاءِ، لَا تَدَعُ أَحَدًا مِنْ هَذِهِ الْأُمَّةِ إِلَّا لَطَمَتْهُ لَطْمَةً، فَإِذَا قِيلَ: انْقَضَتْ، تَمَادَتْ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا، وَيُمْسِي كَافِرًا، حَتَّى يَصِيرَ النَّاسُ إِلَى فُسْطَاطَيْنِ، فُسْطَاطِ إِيمَانٍ لَا نِفَاقَ فِيهِ، وَفُسْطَاطِ نِفَاقٍ لَا إِيمَانَ فِيهِ، فَإِذَا كَانَ ذَاكُمْ فَانْتَظِرُوا الدَّجَّالَ، مِنْ يَوْمِهِ، أَوْ مِنْ غَدِهِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4242.
Abu-Dawood-Alamiah-3704.
Abu-Dawood-JawamiulKalim-3706.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . யஹ்யா பின் உஸ்மான்

3 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ்

4 . அப்துல்லாஹ் பின் ஸாலிம்

5 . அலாஉ பின் உத்பா

6 . உமைர் பின் ஹானிஃ

7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


இந்தச் செய்தியை அபுல்முஃகீரா அவர்களிடமிருந்து அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், யஹ்யா பின் உஸ்மான், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்வஹ்ஹாப், முஹம்மத் பின் அவ்ன் ஆகியோர், அபுல்முஃகீரா —> அப்துல்லாஹ் பின் ஸாலிம் —> அலாஉ பின் உத்பா —> உமைர் பின் ஹானிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். இவற்றில் உமைர் பின் ஹானிஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அலாஉ பின் உத்பா அவர்கள் இந்தச் செய்தியை மவ்ஸூலாக அதாவது நபித்தோழரைக் கூறி அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை உமைர் பின் ஹானிஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் அவர்கள் முர்ஸலாக அதாவது உமைர் பின் ஹானிஃ அவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களை கூறாமல், உமைர் பின் ஹானிஃ (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பாளர்தொடரை நுஐம் பின் ஹம்மாத் அவர்கள் தனது ஃபிதன் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இந்த இருவகைச் செய்திகளில் முர்ஸலான செய்திக்கு முன்னுரிமை தந்து, அலாஉ பின் உத்பா அறிவிக்கும் செய்தி சரியானதல்ல என்றும்; இது இட்டுக்கட்டப்பட்டது போன்று உள்ளது என்றும் கூறியுள்ளார்.

(பார்க்க: இலலுல் ஹதீஸ்-2757)

இதனடிப்படையில் முக்பில் பின் ஹாதீ என்ற அறிஞரும் இந்தச் செய்தி முர்ஸல் என்று கூறுவதே பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அஹாதீஸு முஅல்லா-251)

வேறு சிலர் உமைர் பின் ஹானிஃ அவர்களை ஏற்கத்தக்க அறிஞர்கள் பலமானவர் என்று கூறவில்லை என்பதால் அவரின் காரணமாக இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.


  • ஆனால் அவ்ஸாயீ, யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    ஆகியோர் இவரிடம் குறையில்லை (சுமாரானவர்) என்று கூறியுள்ளனர்.
  • இவரின் சில செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அறிவித்துள்ளனர்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/328, தக்ரீபுத் தஹ்தீப்-1/754)


  • இந்தச் செய்தியை முர்ஸலாக பதிவு செய்துள்ள நுஐம் பின் ஹம்மாத் அவர்கள் பற்றி சில அறிஞர்கள் பாராட்டியிருந்தாலும் வேறு சிலர் இவர் அதிகம் தவறிழைப்பவர் என்றும், பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • மவ்ஸூலாக வந்துள்ள செய்தியில் இதுபோன்ற விமர்சனம் இல்லை என்பதால் இதுவே சரியானதாகும்.
  • (இதில் விமர்சனம் இல்லை என்பதால் தான்) அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இது சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹா-974)


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபுல்முஃகீரா —> அப்துல்லாஹ் பின் ஸாலிம் —> அலாஉ பின் உத்பா —> உமைர் பின் ஹானிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-6168, அபூதாவூத்-4242, முஸ்னத் ஷாமிய்யீன்-2551, ஹாகிம்-8441,


முஸ்னத் ஷாமிய்யீன்-2551.

مسند الشاميين للطبراني (3/ 401)
2551 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ، ثَنَا أَبُو الْمُغِيرَةِ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الْحِمْصِيُّ، عَنِ الْعَلَاءِ بْنِ عُتْبَةَ الْيَحْصَبِيُّ، عَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ الْعَنْسِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُعُودًا، فَذَكَرَ الْفِتَنَ فَأَكْثَرُ ذِكْرِهَا حَتَّى ذَكَرَ فِتْنَةَ الْأَحْلَاسِ، فَقَالَ قَائِلٌ: وَمَا فِتْنَةُ الْأَحْلَاسِ؟ قَالَ: «هِيَ فِتْنَةُ حَرْبٍ، ثُمَّ فِتْنَةُ السَّرَّاءِ، دَخَنُهَا مِنْ تَحْتِ قَدَمَيَّ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي يَزْعُمُ أَنَّهُ مِنِّي، وَلَيْسَ مِنِّي، إِنَّمَا أَوْلِيَائِي الْمُتَّقُونَ، ثُمَّ يَصْطَلِحُ [النَّاسُ] عَلَى رَجُلٍ كَوَرِكٍ عَلَى ضِلْعٍ، ثُمَّ فِتْنَةُ الدُّهَيْمَاءِ لَا تَدَعُ أَحَدًا مِنْ هَذِهِ الْأُمَّةِ إِلَّا لَطَمَتْهُ لَطْمَةً، فَإِذَا قِيلَ انْقَطَعَتْ تَمَادَتْ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، حَتَّى يَصِيرَ النَّاسُ إِلَى فُسْطَاطَيْنِ فُسْطَاطُ إِيمَانٍ لَا نِفَاقَ فِيهِ، وَفُسْطَاطُ نِفَاقٍ لَا إِيمَانَ فِيهِ، فَإِذَا كَانَ ذَاكُمْ فَانْتَظِرُوا الدَّجَّالَ فِي الْيَوْمِ أَوْ غَدٍ»


  • அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> உமைர் பின் ஹானிஃ (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: அல்ஃபிதன்-அபூநுஐம்-93,

الفتن لنعيم بن حماد (1/ 57)
93 – حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فِتْنَةُ الْأَحْلَاسِ فِيهَا حَرْبٌ وَهَرَبٌ، وَفِتْنَةُ السَّرَّاءِ يَخْرُجُ دَخَنُهَا مِنْ تَحْتِ قَدَمَيْ رَجُلٍ يَزْعُمُ أَنَّهُ مِنِّي وَلَيْسَ مِنِّي، إِنَّمَا أَوْلِيَائِيَ الْمُتَّقُونَ، ثُمَّ يَصْطَلِحُ النَّاسُ عَلَى رَجُلٍ، ثُمَّ يَكُونُ فِتْنَةُ الدَّهْمِ، كُلَّمَا قِيلَ: انْقَطَعَتْ تَمَادَتْ، حَتَّى لَا يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلَّا دَخَلَتْهُ، يُقَاتِلُ فِيهَا لَا يَدْرِي عَلَى حَقٍّ يُقَاتِلُ أَمْ عَلَى بَاطِلٍ، فَلَا يَزَالُونَ كَذَلِكَ حَتَّى يَصِيرُوا إِلَى فُسْطَاطَيْنِ: فُسْطَاطِ إِيمَانٍ لَا نِفَاقَ فِيهِ، وَفُسْطَاطِ نِفَاقٍ لَا إِيمَانَ فِيهِ، فَإِذَا هُمَا اجْتَمَعَا فَأَبْصِرِ الدَّجَّالَ الْيَوْمَ أَوْ غَدًا “


2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்ஃபிதன்-அபூநுஐம்-93,

الفتن لنعيم بن حماد (1/ 57)
95 – حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَافِعٍ، عَمَّنْ حَدَّثَهُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سَتَكُونُ بَعْدِي فِتَنٌ، مِنْهَا فِتْنَةُ الْأَحْلَاسِ، يَكُونُ فِيهَا حَرْبٌ وَهَرَبٌ، ثُمَّ بَعْدَهَا فِتَنٌ أَشَدُّ مِنْهَا، ثُمَّ تَكُونُ فِتْنَةٌ، كُلَّمَا قِيلَ: انْقَطَعَتْ، تَمَادَتْ، حَتَّى لَا يَبْقَى بَيْتٌ إِلَّا دَخَلَتْهُ، وَلَا مُسْلِمٌ إِلَّا صَكَّتْهُ، حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ عِتْرَتِي “

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7643-இஸ்மாயீல் பின் ராஃபிஉ என்பவர் பற்றி அதிகமான ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/149, தக்ரீபுத் தஹ்தீப்-1/139)

மேலும் இந்தச் செய்தியை அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யார் என்ற விவரம் இல்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


 

1 comment on Abu-Dawood-4242

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.