தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6645

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபூகபீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் இருந்த போது அவர்களிடம், “கான்ஸ்டாண்டிநோபிள் நகரம், ரோம் நகரம் இவ்விரண்டு நகரங்களில் எது முதலில் வெற்றிக்கொள்ளப்படும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஒரு -பெட்டியை கொண்டு வரச் செய்து அதிலிருந்து ஒரு ஏட்டை எடுத்தார்கள்.

(பின்பு) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்துக்கொண்டு அவர்கள் கூறுவதை எழுதுவோம். (அப்போது ஒரு தடவை) கான்ஸ்டாண்டிநோபிள் நகரம், ரோம் நகரம் இவ்விரண்டு நகரங்களில் எது முதலில் வெற்றிக்கொள்ளப்படும்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிர்க்கல் மன்னனின் நகரமான கான்ஸ்டாண்டிநோபிள் தான் என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 6645)

حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو قَبِيلٍ، قَالَ:

كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي، وَسُئِلَ: أَيُّ الْمَدِينَتَيْنِ تُفْتَحُ أَوَّلًا: الْقُسْطَنْطِينِيَّةُ أَوْ رُومِيَّةُ؟ فَدَعَا عَبْدُ اللَّهِ بِصُنْدُوقٍ لَهُ حَلَقٌ، قَالَ: فَأَخْرَجَ مِنْهُ كِتَابًا، قَالَ: فَقَالَ عَبْدُ اللَّهِ: بَيْنَمَا نَحْنُ حَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكْتُبُ، إِذْ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْمَدِينَتَيْنِ تُفْتَحُ أَوَّلًا: قُسْطَنْطِينِيَّةُ أَوْ رُومِيَّةُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَدِينَةُ هِرَقْلَ تُفْتَحُ أَوَّلًا» يَعْنِي قُسْطَنْطِينِيَّةَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6645.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6468.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அய்யூப் பற்றி சிலர் பலமானவர் எனவும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். இவரின் ஹதீஸ்களில் நிராகரிக்கப்படதக்க செய்திகளும் உள்ளன. சில அறிஞர்கள் அதை தெரிந்து சரியான செய்திகளை மட்டும் இவரிடமிருந்து அறிவித்துள்ளனர் என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா 8/6)

  • இவர் நம்பகமானவர் என்றாலும் சில நேரம் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1049)


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6645, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19463, தாரிமீ-503, ஹாகிம்-8550, 8662,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.