தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7695

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

7695. உமர் பின் அதாஉ பின் அபுல்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன் அபூஅப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அழைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: “இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளை விடச் சிறந்தததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: (ரஹ்)

அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்பில், “ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன்” என்றும், இப்னு பக்ர் அவர்களின் அறிவிப்பில் “ஸைத் பின் ரய்யான் (ரஹ்) அவர்களுடைய மருமகன்” என்றும் இடம்பெற்றுள்ளது.

இப்னு ஜுரைஜ் (ரஹ்)

ابن جريج

இறப்பு: ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ்

தந்தை பெயர்: அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ்

வம்சம்: உமைய்யா கிளையின் அடிமை

புனைப்பெயர்: அபூ வலீத், அபூ காலித்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: ரோம், மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 80, ரோம்

இறப்பு: ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு ஜுரைஜ் ரஹ் அவர்கள் அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ் என்ற இயற்பெயர் கொண்ட ஒரு மிகப் பலமான தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 80ல் ரோம் நகரில் பிறந்தார். மக்காவில் வசித்த இவர், ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு மரணமடைந்தார்.

இவர் ஹதீஸ் நூல்களைத் தொகுத்த முதல் அறிஞர்களில் ஒருவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அதா பின் அபூரபாஹ், அஸ்ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார், நாஃபிஉ, ஹிஷாம் பின் உர்வா, மூஸா பின் உக்பா, ஸைத் பின் அஸ்லம், ஸுலைமான் பின் அபூமுஸ்லிம் அல்அஹ்வல், ஸஃப்வான் பின் ஸுலைம் அல்மதனீ, தாவூஸ் பின் கைஸான், அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அபூமுலைக்கா, ஸுஹைல் பின் அபூஸாலிஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல் அஸீஸ் (இப்னு ஜுரைஜின் மகன்), முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஜுரைஜ், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாஈ, அல்லைஸ் பின் ஸஃத், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, ஹம்மாத் பின் ஸைத், அப்துல் வஹ்ஹாப் பின் அப்துல் மஜீத் அஸ்ஸகஃபீ, ஈஸா பின் யூனுஸ், வுஹைப் பின் காலித், மூஸா பின் தாரிக், அபூ குர்ரா, ஹஃப்ஸ் பின் கியாஸ்

வேறு பெயர்கள்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ், அபூ வலீத், அபூ காலித்


ஆதாரம்: muslimscholars.info (11070) · Should verify


حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، وَابْنُ بَكْرٍ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ:

أَنَّهُ بَيْنَمَا هُوَ جَالِسٌ مَعَ نَافِعِ بْنِ جُبَيْرٍ، إِذْ مَرَّ بِهِمَا أَبُو عَبْدِ اللَّهِ خَتَنُ زَيْدِ بْنِ الرَّيَّانِ – وَقَالَ ابْنُ بَكْرٍ: ابْنِ الزَّبَّانِ – فَدَعَاهُ نَافِعٌ، فَقَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ مَعَ الْإِمَامِ أَفْضَلُ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ صَلَاةً يُصَلِّيهَا وَحْدَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7695.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7506.



மேலும் பார்க்க: புகாரி-477 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.