தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2643

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு தடவையும், வியாழக்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் ஒவ்வொரு முஃமினான அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு அடியாரைத் தவிர.

அப்போது, “இவ்விருவரும் (சமாதானத்தின்பால்) திரும்பும்வரை இவ்விருவரையும் விட்டுவையுங்கள். அல்லது தாமதப்படுத்துங்கள்” என்று கூறப்படுகிறது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸாலிஹ் (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 2643)

وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَن أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ:

تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ كُلَّ جُمُعَةٍ مَرَّتَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ، إِلاَّ عَبْدًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا، أَوِ ارْكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2643.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1621.




மேலும் பார்க்க: திர்மிதீ-747 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.