ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஸஃப்வான் பின் ஸுலைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் கஞ்சனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கும் அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள்.
(முஅத்தா மாலிக்: 2832)وَحَدَّثَنِي مَالِكٌ، عَن صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، أَنَّهُ قَالَ:
قِيلَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلاً؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ فَقَالَ: لاَ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2832.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1796.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19795-ஸஃப்வான் பின் ஸுலைம் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார். எனவே இந்த செய்தி முர்ஸல் என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இப்னு அப்தில்பர் அவர்கள் இந்த செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்தி எனக்கு கிடைக்கவில்லை. இந்த செய்தி முர்ஸலான, ஹஸன் தரத்தில் உள்ள செய்தி என்று கூறியுள்ளார். (நூல்: அல்இஸ்தித்கார் 27/353)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இந்த செய்தியை முஃளல் என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீஜ் மிஷ்காத்)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : மாலிக்-2832 , ஷுஅபுல் ஈமான்-4472 .
சமீப விமர்சனங்கள்