பாடம்: 78
பொருளை விரையமாக்குவது, இரட்டைவேடமிடுவது (ஆகியவை) குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விசயங்களை விரும்புகிறான். மூன்று விசயங்களை வெறுக்கிறான்.
1 . நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணங்குவதையும்;
2 . பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பதையும்;
3 . உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொருப்பாளனாக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும் அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான்.
1 . (ஆதாரமில்லாமல்) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று கூறுவதையும்;
2 . பொருளை விரையமாக்குவதையும்;
3 . (தேவையில்லாமல்) அதிகமாகக் கேள்வி கேட்பதையும் அல்லாஹ் உங்களிடத்தில் வெறுக்கிறான்.
அறிவிப்பவர்: அபூஸாலிஹ் (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 2833)78- مَا جَاءَ فِي إِضَاعَةِ الْمَالِ، وَذِي الْوَجْهَيْنِ.
حَدَّثَنِي مَالِكٌ، عَن سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ:
إِنَّ اللهَ يَرْضَى لَكُمْ ثَلاَثًا، وَيَسْخَطُ لَكُمْ ثَلاَثًا: يَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعًا، وَأَنْ تَنَاصَحُوا مَنْ وَلاَّهُ اللهُ أَمْرَكُمْ، وَيَسْخَطُ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2833.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1797.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூஸாலிஹ் அவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-8718 .
சமீப விமர்சனங்கள்