அஸ்லம் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன்-இறைநம்பிக்கையாளர்களின் தலைவருக்காக பயணம் செய்வதற்கேற்ற ஒட்டகத்தை எனக்கு காட்டுங்கள்! என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், ஸகாத் ஒட்டகம் இருக்கிறது. (அதைத் தரவா?) என்று கூறினேன்.
அதற்கவர்கள், குண்டான மனிதர் கடுமையான வெயில் காலத்தில் தனது வேட்டியிலிருந்து தொடை வரை உள்ள பகுதிகளைக் கழுவி அதை உமக்கு கொடுத்தால் அதை நீ குடிப்பாயா? என்று கேட்டார்கள். உடனே நான் கோபமடைந்து, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்னிடம் இது போன்ற வார்த்தைகளை சொல்கிறீர்களே? (இது முறையா?) என்று கூறினேன். அதற்கவர்கள், “ஸதகா, ஸகாத் எனும் தர்மப்பொருட்கள் மக்களின் அழுக்குகளாகும். (அதை வழங்குவதின் மூலம்) தங்களை கழுவிக்கொள்கிறார்கள்” என்று கூறினார்கள்.
(முஅத்தா மாலிக்: 2858)وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ: قَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ:
ادْلُلْنِي عَلَى بَعِيرٍ مِنَ الْمَطَايَا أَسْتَحْمِلُ عَلَيْهِ أَمِيرَ الْمُؤْمِنِينَ، فَقُلْتُ: نَعَمْ جَمَلاً مِنَ الصَّدَقَةِ، فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: أَتُحِبُّ أَنَّ رَجُلاً بَادِنًا فِي يَوْمٍ حَارٍّ غَسَلَ لَكَ مَا تَحْتَ إِزَارِهِ وَرُفْغَيْهِ، ثُمَّ أَعْطَاكَهُ فَشَرِبْتَهُ؟ قَالَ: فَغَضِبْتُ، وَقُلْتُ: يَغْفِرُ اللهُ لَكَ، أَتَقُولُ لِي مِثْلَ هَذَا؟ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: إِنَّمَا الصَّدَقَةُ أَوْسَاخُ النَّاسِ يَغْسِلُونَهَا عَنهُمْ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2858.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . யஹ்யா அல்லைஸீ
2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்
3 . ஸைத் பின் அஸ்லம்
4 . அஸ்லம் அல்அதவீ
5 . ஸைத் பின் அர்கம் (ரலி)
ஸதகா, ஸகாத் எனும் தர்மப்பொருட்கள் மக்களின் அழுக்குகளாகும் என்ற கருத்து நபியின் சொல்லாகவும் வந்துள்ளது.
பார்க்க: முஸ்லிம்-1945.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்
முஸ்லிமின் இந்தப்படி வந்து இருக்க நீங்கள் صدقة விற்க்கு ஜகாத் என்று அர்த்தம் செய்துள்ளீர்களே❓
அஸ்ஸலாமு அலைக்கும்.
முஸ்லிம் 1945 இல் வரும் ஸதகா விற்கு பொருள் ஸகாத் என்று அந்த செய்தியில் உள்ளதைக் கவனிக்கவும். பல ஹதீஸ்களில் ஸகாத்தைக் குறிக்க ஸதகா என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது. ஸதகா عام. ஸகாத் خاص.