தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2861

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 89

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

1 . நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.
2 . நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
3 . நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.
4 . நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
5 . நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

(முஅத்தா மாலிக்: 2861)

89 – أَسْمَاءُ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ.

حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ النَّبِيَّ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ:

لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا الْمَاحِي، الَّذِي يَمْحُو اللهُ بِيَ الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ، الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2861.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-3532 .

2 comments on Muwatta-Malik-2861

  1. சிறிது வார்த்தை வித்தியாசத்துடன்:

    * *தப்ரானி அவ்சத்:*
    *٤٤١٧ – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ الطَّيَالِسِيُّ قَالَ: نا أَحْمَدُ بْنُ حَفْصٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَالْمُقَفَّى، وَالْحَاشِرُ، وَنَبِيُّ التَّوْبَةِ، وَنَبِيُّ الْمَلْحَمَةِ»*

    *لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ إِلَّا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، تَفَرَّدَ بِهِ: أَحْمَدُ بْنُ حَفْصٍ*

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்தச் செய்தியை அம்ர் பின் முர்ரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும் லீ கம்ஸது அஸ்மா என்று கூறவில்லை. பொதுவாக சில பெயர்கள் என்றே அறிவித்துள்ளனர். உமர் பின் ஸயீத் அவர்களின் அறிவிப்பில் மட்டுமே இப்படி உள்ளது. எனவே இது ஷாத் ஆகும். (உமர் பின் ஸயீத் இந்த ஒரு செய்தியை மட்டுமே அம்ர் பின் முர்ரா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அதிகம் ஹதீஸ்களை அறிவித்துள்ள அஃமஷ் போன்றவர்கள் இவ்வாறு அறிவிக்கவில்லை)

    வேறு வகையான அறிவிப்பாளர்தொடர்களில் தான் லீ கம்ஸது அஸ்மா என்று உள்ளது.
    நபி ஸல் அவர்களின் பண்புகளைக் குறிக்கும் சில பெயர்கள் குர்ஆனில் உள்ளன. இவ்வாறே சில ஹதீஸ்களிலும் உள்ளன. இந்தப் பெயர்களில் 5 பெயர்கள் பிரபலமானவை என்பதால் சில ஹதீஸ்களில் 5 பெயர் என்று உள்ளது. வேறு சில ஹதீஸ்களில் எண்ணிக்கை கூறப்படாமல் வந்துள்ளது. நபியின் சில பெயரை நாங்கள் மனனமிட்டோம். சிலதை நாங்கள் மனனமிடவில்லை என்று அபூமூஸா (ரலி) அவர்களே கூறியதாகவும் செய்தி உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.