தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1133

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு இரவில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் அல்-பகரா எனும் (அல்குர்ஆன்: 2:1-286) ஆவது அத்தியாயத்தை ஓதித் துவங்கினார்கள். நூறு வசனங்கள் ஓதிய பிறகும் ருகூஃ செய்யவில்லை. தொடர்ந்து ஓதினார்கள். நான் (மனதுக்குள்) ‘இரண்டு ரக்அத்துகளில் (இந்த அத்தியாயத்தை) முடிப்பார்கள்’ என்று நினைத்தேன். மேலும் ஓதினார்கள். (பிறகு) ‘இதை முடித்துவிட்டு ருகூஃ செய்வார்கள்’ என்று நினைத்தேன். அவர்கள் மேலும் ஓதி, பிறகு அந்-நிஸா எனும் (அல்குர்ஆன்: 4:1-176) ஆவது அத்தியாயத்தையும் ஓதினார்கள். பிறகு ஆலுஇம்ரான் எனும் (அல்குர்ஆன்: 3:1-200) ஆவது அத்தியாயத்தையும் ஓதினார்கள்.

பிறகு அவர்கள், தான் நின்ற நேரத்தைப் போன்றே (அதே அளவு) நீளமாக ருகூஃ செய்தார்கள். ருகூஃவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’, ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’, ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்தான என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்று (அதிகமாகக்) கூறினார்கள்.

பிறகு தலையை உயர்த்தி, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லகல் ஹம்து’ (புகழ்ந்தவனின் புகழை அல்லாஹ் கேட்டான். எங்கள் இரட்சகனே! உனக்கே எல்லாப் புகழும்) என்று கூறினார்கள். (பிறகு) நீண்ட நேரம் நின்றார்கள்.

பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். அந்த ஸஜ்தாவையும் நீளமாக்கினார்கள். ஸஜ்தாவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’, ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’, ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ (உயர்ந்த என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்று (அதிகமாகக்) கூறினார்கள்.

(மேலும்) அச்சமூட்டும் அல்லது அல்லாஹ்வை மகிமைப்படுத்தும் எந்த வசனத்தைக் கடந்து சென்றாலும், அதைக் குறித்து அவர்கள் (பிரார்த்தனை செய்து) நினைவு கூராமல் இருக்கவில்லை.

(நஸாயி: 1133)

نَوْعٌ آخَرُ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ الْمُسْتَوْرِدِ بْنِ الْأَحْنَفِ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ قَالَ:

صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَاسْتَفْتَحَ بِسُورَةِ الْبَقَرَةِ، فَقَرَأَ بِمِائَةِ آيَةٍ لَمْ يَرْكَعْ، فَمَضَى قُلْتُ: يَخْتِمُهَا فِي الرَّكْعَتَيْنِ، فَمَضَى قُلْتُ: يَخْتِمُهَا ثُمَّ يَرْكَعُ، فَمَضَى حَتَّى قَرَأَ سُورَةَ النِّسَاءِ، ثُمَّ قَرَأَ سُورَةَ آلِ عِمْرَانَ، ثُمَّ رَكَعَ نَحْوًا مِنْ قِيَامِهِ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ»، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ» وَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ يَقُولُ فِي سُجُودِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى» لَا يَمُرُّ بِآيَةِ تَخْوِيفٍ أَوْ تَعْظِيمٍ لِلَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا ذَكَرَهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1121.
Nasaayi-Shamila-1133.
Nasaayi-Alamiah-1121.
Nasaayi-JawamiulKalim-1120.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: முஸ்லிம்-1421.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.