தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1729

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1729.

நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது  ரக்அத்தில்) குல் ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்வார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

உபை பின் கஅப் (ரலி)

உபை பின் கஅப்-அல்அன்ஸாரீ (ரலி) – Ubayy ibn Ka'b

இறப்பு: ஹிஜ்ரி 30, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: உபை பின் கஅப் பின் கைஸ் பின் உபைது பின் ஸைத் பின் மஃஉவியா பின் அம்ர் பின் மாலிக் பின் அன்நஜ்ஜார்

தந்தை பெயர்: கஅப் பின் கைஸ்

வம்சம்: அன்ஸாரீ, கஸ்ரஜீ, பனூ நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூ மன்ஸர், அபூ துஃபைல், குர்ஆன் ஓதுபவர்களின் தலைவர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 30, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் மதீனாவின் முதல் இஸ்லாத்தைத் தழுவியவர்களில் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் எழுத்தராகவும், வஹீ எழுதுபவராகவும் பணியாற்றினார். நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்த சுமார் இருபது நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

குர்ஆனை முதலில் எழுத்து வடிவில் தொகுத்தவர்களில் ஒருவராகவும் இருந்தார். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இவரை 'முஸ்லிம்களின் தலைவர்' என்று அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இவரிடம் குர்ஆனை ஓதும்படி அல்லாஹ் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): உமர் பின் கத்தாப் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூ அய்யூப் அல்அன்ஸாரீ (ரலி), அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), ஸுலைமான் பின் ஸர்த், ஸஹ்ல் பின் ஸஃத் பின் மாலிக், முஹம்மத் பின் உபை பின் கஅப், அத்துஃபைல் பின் உபை பின் கஅப், ஸைத் பின் அஸ்லம், அபுல்ஆலியா

வேறு பெயர்கள்: அபூ மன்ஸர், அபூ துஃபைல்


ஆதாரம்: muslimscholars.info (39) · Should verify


نَوْعٌ آخَرُ مِنَ الْقِرَاءَةِ فِي الْوِتْرِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ إِشْكَابَ النَّسَائِيُّ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ الْأَعْمَشِ، عَنْ طَلْحَةَ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْوِتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا سَلَّمَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1729.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.



மேலும் பார்க்க: நஸாயீ-1699 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.