தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1855

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) கூறினார் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி), ‘(நபி – ஸல் – அவர்கள் அப்படிச் சொல்லவில்லை). இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறையை கடந்து சென்றபோது, “இதில் அடக்கம்செய்யப்பட்டவர் வேதனைசெய்யப்படுகிறார்; அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்” என்றே கூறினார்கள் என்று கூறிவிட்டு ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

(நஸாயி: 1855)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، فَذُكِرَ ذَلِكَ لِعَائِشَةَ فَقَالَتْ: وَهِلَ، إِنَّمَا مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ، فَقَالَ: «إِنَّ صَاحِبَ الْقَبْرِ لَيُعَذَّبُ، وَإِنَّ أَهْلَهُ يَبْكُونَ عَلَيْهِ»، ثُمَّ قَرَأَتْ {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1855.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1842.




மேலும் பார்க்க: புகாரி-1286 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.