தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2107

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது ரமளான் மாதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது உத்பா (ரலி) அவர்கள், “நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “ரமளான் மாதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று சொன்னோம்.

அப்போது அவர்கள், “ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

மேலும் ஒவ்வொரு இரவும் ஒரு அறிவிப்பாளர், ‘நன்மையைத் தேடுபவரே! முன்னோக்கி வாருங்கள். தீமையைத் தேடுபவரே! விலகி இருங்கள்’ என்று அறிவிப்புச் செய்கிறார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அபூஅப்துர்ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி (இவ்வாறு உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்கள் நபியிடமிருந்து கேட்டதாக வந்திருப்பது) தவறாகும்.

(நஸாயி: 2107)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَرْفَجَةَ، قَالَ:

عُدْنَا عُتْبَةَ بْنَ فَرْقَدٍ، فَتَذَاكَرْنَا شَهْرَ رَمَضَانَ، فَقَالَ: مَا تَذْكُرُونَ؟ قُلْنَا: شَهْرَ رَمَضَانَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” تُفْتَحُ فِيهِ أَبْوَابُ الْجَنَّةِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَتُغَلُّ فِيهِ الشَّيَاطِينُ، وَيُنَادِي مُنَادٍ كُلَّ لَيْلَةٍ: يَا بَاغِيَ الْخَيْرِ هَلُمَّ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2107.
Nasaayi-Alamiah-2080.
Nasaayi-JawamiulKalim-2090.




(இந்தச் செய்தியின் கருத்து சரியானது தான் என்றாலும்) இதன் அறிவிப்பாளர்தொடர் தவறு என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . முஹம்மத் பின் மன்ஸூர்

3 . ஸுஃப்யான் பின் உயைனா

4 . அதாஉ பின் ஸாயிப்

5 . அர்ஃபஜா பின் அப்துல்லாஹ்

6 . உத்பா பின் ஃபர்கத் (ரலி)


மேலும் பார்க்க: நஸாயீ-2108.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.