அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு வீட்டில் இருந்தேன். அங்கு உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களும் இருந்தார்கள். நான் ஒரு ஹதீஸ் சொல்ல விரும்பினேன். ஆனால் அங்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (வேறு) ஒருவரும் இருந்தார். அவர் ஹதீஸ் சொல்வதற்கு என்னை விட மிகவும் தகுதியானவர் போல் தோன்றியது.
(அவரிடம், உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்கள், “ரமளான் மாதம் குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஹதீஸை எங்களுக்கு கூறுங்கள்” என்று கேட்க) அவர் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்தில், வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன; மேலும் ஒவ்வொரு கெட்ட ஷைத்தானும் விலங்கிடப்படுகிறான்.
மேலும் (வானவர்களில்) ஒரு அழைப்பாளர், “நன்மையை தேடுவோரே! வாருங்கள். தீமையை தேடுவோரே! (அதை) தவிர்த்து விடுங்கள்” என்று ஒவ்வொரு இரவிலும் அழைக்கிறார்.
(நஸாயி: 2108)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَرْفَجَةَ، قَالَ
كُنْتُ فِي بَيْتٍ فِيهِ عُتْبَةُ بْنُ فَرْقَدٍ، فَأَرَدْتُ أَنْ أُحَدِّثَ بِحَدِيثٍ، وَكَانَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنَّهُ أَوْلَى بِالْحَدِيثِ مِنِّي، فَحَدَّثَ الرَّجُلُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” فِي رَمَضَانَ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَيُصَفَّدُ فِيهِ كُلُّ شَيْطَانٍ مَرِيدٍ، وَيُنَادِي مُنَادٍ كُلَّ لَيْلَةٍ: يَا طَالِبَ الْخَيْرِ هَلُمَّ، وَيَا طَالِبَ الشَّرِّ أَمْسِكْ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-2108.
Nasaayi-Shamila-2108.
Nasaayi-Alamiah-2081.
Nasaayi-JawamiulKalim-2091.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . முஹம்மத் பின் ஜஃபர்
4 . ஷுஅபா
5 . அதாஉ பின் ஸாயிப்
6 . அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் , 7 . உத்பா பின் ஃபர்கத் (ரலி)
8 . பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர்
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் அவர்கள் பிற்காலத்தில் மூளைக் குழம்பியவர் என்றாலும், இவர் மூளைக் குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து செவியேற்றவர்களான ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
போன்றவர்கள் இவரிடமிருந்து அறிவிப்பதில் விமர்சனம் இல்லை.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/332, தஹ்தீபுல் கமால்-20/86, அல்இக்மால்-9/245, அல்கவாகிபுன் நய்யிராத்-1/319)
- மேலும் இதில் வரும் ராவீ-28340-அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் என்பவரை பலமானவர்; கூஃபாவைச் சேர்ந்த தாபிஈ என்று இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளார்.
الثقات للعجلي ط الباز (ص: 331)
1120- عرفجة بن عبد الله الثقفي: “كوفي”، تابعي, ثقة.
(நூல்: அஸ்ஸிகாத்-இஜ்லீ-1120)
بيان الوهم والإيهام في كتاب الأحكام (5/ 58):
(2298) وذكر من طريق النسائي، عن عرفجة، عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم زيادة: «وينادي مناد: يا باغي الخير هلم … » الحديث في فضل شهر رمضان.
وسكت عنه، ولعله مما تسامح فيه، فإن عرفجة بن عبد الله الثقفي، لا تعرف عدالته، وهو يروي عن عائشة،، وابن مسعود، وعلي، رضي الله عنهم، وروى عنه منصور، وعطاء بن السائب، وعمر بن عبد الله بن يعلى بن مرة
بهذا ذكره أبو حاتم ولم يزد.
ولا يعتل الحديث بكونه من رواية عطاء بن السائب عنه، فإنه إنما رواه عنه شعبة، وهو قديم السماع منه، ممن أخذ عنه قبل اختلاطه
بيان الوهم والإيهام في كتاب الأحكام (5/ 721):
ذكر حديث عرفجة في فضل رمضان
وسكت عنه، وفي عرفجة أنه قد روى عنه جماعة، ولكنه لا تعرف حاله، فأما عطاء بن السائب فإن الحديث من رواية شعبة عنه.
இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
அவர்கள், அர்ஃபஜா அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். என்றாலும் இவரின் நிலை, நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம்-5/58, 5/721)
அர்ஃபஜா அவர்களை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று கூறுவது சரியல்ல.
அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
போன்ற பலரும் இந்தச் செய்தியை, அதாஉ பின் ஸாயிப் —> அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் —> பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள், இந்தச் செய்தியை அதாஉ பின் ஸாயிப் —> அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் —> உத்பா பின் ஃபர்கத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தவறு என்று அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
மிஸ்ஸீ போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (3/ 165):
4738 – حَدثنِي أبي قَالَ حَدثنَا سُفْيَان عَن عَطاء بن السَّائِبِ عَنْ عَرْفَجَةَ قَالَ كُنَّا عِنْدَ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ فَذَكَرُوا شَهْرَ رَمَضَانَ فَقَالَ مَا سَمِعْتُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ تُفَتَّحُ فِيهِ أَبْوَابُ الْجَنَّةِ وَتُغَلَّقُ فِيهِ أَبْوَابُ النَّارِ وَتُغَلُّ فِيهِ الشَّيَاطِينُ وَيُنَادِي مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ هَلُمَّ وَيَا بَاغِيَ الشِّرِّ أَقْصِرْ
سَمِعْتُ أبي يَقُول كَانَ سُفْيَان يخطىء فِي هَذَا الْحَدِيثِ لَمْ يَسْمَعْهُ عُتْبَةُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ حَدَّثَ عُتْبَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறுகிறார்:
எனது தந்தை அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், “இந்தச் செய்தியில் ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
தவறிழைத்துள்ளார். ஏனெனில் இந்தச் செய்தியை உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த பெயர் கூறப்படாத ஒரு மனிதரே, உத்பா (ரலி) அவர்களுக்கு அறிவித்தார்” என்று கூறினார்கள்.
(நூல்கள்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-4738, நஸாயீ-2107, துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-9758)
1 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பார்க்க: ஹதீஸு ஸுஃப்யான் ஸவ்ரீ-168, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2108,
- ஹதீஸு ஸுஃப்யான் ஸவ்ரீ-168.
من حديث سفيان الثوري – ت عامر صبري (ص106):
168- حدثنا قَبِيصَة ، عن سفيان عن عَطَاء بن السَّائب عن عرفجة عن عتبة بن فرقد عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال: إذا جاء رمضان صفدت فيه الشياطين وغلقت فيه أبواب النار وفتحت فيه أبواب الجنة ونادى مناد يا باغي الخير هلم يا باغي الشر أقصر.
…
இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் கபீஸா அவர்கள், நபித்தோழரின் சொல் போன்று அறிவித்துள்ளார். ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் சில செய்திகளில் கபீஸா தவறிழைத்துள்ளார் என்பதற்கு வேறு சான்றுகள் உள்ளது.
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-682.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-7450, புகாரி-3277,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள், விமர்சனங்கள் சரியான வரிசையில் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்