அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்தின் முதலாவது இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும், முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் அடைக்கப்படுவதில்லை.
அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவர் “நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துக்கொள்” என்று அறிவிக்கின்றார். அப்போது அல்லாஹ்வால் பலர் நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகின்றது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(திர்மிதி: 682)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ
وَفِي البَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَابْنِ مَسْعُودٍ، وَسَلْمَانَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-618.
Tirmidhi-Shamila-682.
Tirmidhi-Alamiah-618.
Tirmidhi-JawamiulKalim-617.
إسناده حسن رجاله ثقات عدا أبو بكر بن عياش الأسدي وهو صدوق حسن الحديث (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அய்யாஷ் அவர்கள் அஃமஷ் வழியாக அறிவிக்கும் செய்திகளில் பலவீனமானவர் என இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள் விமர்சித்துள்ளார்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
(நூல்: தஹ்தீபுல் கமால் 33 / 129 )
1 . இந்தக் கருத்தில் அபூ ஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-682 , இப்னு மாஜா-1642 , இப்னு குஸைமா-1883 , இப்னு ஹிப்பான்-3435 , ஹாகிம்-1532 , ஸுனன் ஸகீர் பைஹகீ-1395 , குப்ரா பைஹகீ-8501 ,
இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள் பார்க்க: அஹ்மத்-7450 , புகாரி-3277 ,
இப்னு நுமைர் என்ற ஒரே அறிஞரின் கூற்றை வைத்து அபு பக்கர் இப்னு அய்யாஷ் பலஹீனமானவர் என கூறி உள்ளீர்கள். ஆனால் இவர் குறித்து அறிஞர்கள் பல கருத்துக்கள் கூறி உள்ளனர்- அவற்றை எல்லாத்தையும் புறக்கணித்து விட்டு ஒருவர் கூற்றை மட்டும் வைத்து இப்படி முடிவு செய்வது சரியாக தெரியவில்லை. மிக முக்கியமாக இவர் அறிவிக்கும் பல ஹதீஸ்கள் புகாரியில் உள்ளது. மீள் ஆய்வு செய்யவும்.
அஸ்ஸலாமு அலைக்கும். இந்தச் செய்தி பல வகை அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. புகாரீ அவர்கள், அஃமஷ் —> முஜாஹித் என்ற அறிவிப்பாளர்தொடரையே மிகச் சரியானது என்று கூறியுள்ளார். அஃமஷ் வழியாக இப்னு அய்யாஷ் அறிவிக்கும் செய்திகளில் தவறு இருப்பதால் தான் இப்னு நுமைர் அவ்வாறு விமர்சித்துள்ளார் என்று தெரிகிறது. திர்மிதீ அவர்களும் இதை ஃகரீப் என்று கூறியுள்ளார்.
இந்தச் செய்தியில் மேலும் கூடுதல் தகவலை சேர்க்கவேண்டியுள்ளது. இன்ஷா அல்லாஹ் சேர்க்கிறோம்.