அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானுடைய) ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்; மேலும் ஒவ்வொரு அடியாருக்கும் (அதில்) ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அல்லது அபூஸயீத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 7450)حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَوْ عَنْ أَبِي سَعِيدٍ – هُوَ شَكَّ، يَعْنِي الْأَعْمَشَ -، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ لِلَّهِ عُتَقَاءَ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، لِكُلِّ عَبْدٍ مِنْهُمْ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7450.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7268.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அஃமஷ் (ரஹ்) அவர்கள் இரு நபித்தோழர்களில் யாரோ ஒருவர் என்று சந்தேகமாக அறிவித்திருந்தாலும் இது குறையல்ல. இது சரியான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த செய்தியில் ரமளான் என்று கூறப்படாவிட்டாலும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தனது இத்ராஃபுல் முஸ்னத் என்ற நூலில் வேறு ஹதீஸ்களின் அடிப்படையில் இது ரமளான் மாதத்தின் இரவு, பகலை குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: இத்ராஃபுல் முஸ்னிதில் முஃதலீ பிஅத்ராஃபில் முஸ்னத்-7/203)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (8/ 209)
1520- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هريرة، عن النبي صلى الله عليه وسلم: إِنَّ للَّهِ عُتَقَاءَ يَعْتِقُهُمْ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ مِنَ النَّارِ، وَلِكُلِّ مُؤْمِنٍ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ.
فَقَالَ: يَرْوِيهِ الْأَعْمَشُ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ مَالِكُ بْنُ سُعَيْرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَرَوَاهُ قُطْبَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ وَالرَّبِيعُ بْنُ بَدْرٍ … ، وَمُحَمَّدُ بْنُ كُنَاسَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هريرة، عن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالْأَوَّلُ أَصَحُّ.
…
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 401)
3296- وسئل عن حديث أبي صالح، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: إن لله عتقاء في كل يوم وليلة، وإن لكل مسلم في كل يوم دَعْوَةٌ مُسْتَجَابَةٌ.
فَقَالَ: يَرْوِيهِ الْأَعْمَشُ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فرواه أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ جَابِرٍ.
وخالفه قُطْبَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، وَالرَّبِيعُ بْنُ بَدْرٍ، ومحمد بن كناسة، رووه، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هريرة، وهو الأشبه بالصواب.
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அல்லது அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி), அபூஸயீத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-7450,
- அபான் பின் அபூஅய்யாஷ் —> அபுஸ்ஸித்தீக் அந்நாஜீ —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6401,
2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22202.
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1643.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
மேலும் பார்க்க: புகாரி-3277, திர்மிதீ-682,
நரகத்தில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
ஏனெனில் அனைவரும் மரணித்து மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்பட்டு தான் சொர்க்கம் நரகம் தீர்மானிக்கப்படும் என்பதை நாம் அறிவோம்..
ஆனால் இதில் நரகத்தில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை எவ்வாறு அணுக வேண்டும்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
புகாரி-3277 இல் இடம்பெறும் செய்தியை எப்படி புரிவோமோ அப்படி புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது நரகத்தை விட்டு விடுதலை பெறுவதற்குரிய செயல்களை செய்வதற்கு ரமாலனின் வாய்ப்பு உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து.
“மேலும் ஒவ்வொரு அடியாருக்கும் (அதில்) ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது” என்ற வாக்கியம் அதற்குப் பிறகு கூறப்பட்டிருப்பதிலிருந்து இதைப் புரிந்துக்கொள்ளலாம்.
அல்ஹம்துலில்லாஹ் அழகான ஒரு விளக்கம் என் சந்தேகம் தீர்ந்தது விட்டது… ஜஸாஹல்லாஹ் ஹைரா..அல்லாஹ் உங்களுக்கு மார்க்க கல்வியை விலாசமாக்குவானாக சகோதரரே
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ், ஜஸாகல்லாஹு கைரா.