தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2598

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவர் யாசகம் கேட்பது.

(நபி-ஸல்-அவர்களின் ஒரு நிகழ்வை) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இரண்டு பேர் என்னிடம் வந்து, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்கச் சென்றோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். (இதை அறிவிப்பவர்களில் ஒருவரான முஹம்மத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர்கள்மீது சுழலவிட்டார்கள்” என்று கூறினார்கள்.) அவர்கள் இருவரும் பலமானவர்களாக இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் விரும்பினால் (தர்மத்தைப் பெற்றுக் கொள்ளலாம்). ஆனால், தர்மத்தில் பணக்காரனுக்கோ அல்லது உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவனுக்கோ பங்கில்லை.

(நஸாயி: 2598)

مَسْأَلَةُ الْقَوِيِّ الْمُكْتَسِبِ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَدِيِّ بْنِ الْخِيَارِ،

أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا: أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنَ الصَّدَقَةِ؟ فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ، – وَقَالَ مُحَمَّدٌ: بَصَرَهُ – فَرَآهُمَا جَلْدَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2598.
Nasaayi-Alamiah-2551.
Nasaayi-JawamiulKalim-2564.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், 3 . முஹம்மத் பின் முஸன்னா

4 . யஹ்யா பின் ஸயீத்

5 . ஹிஷாம் பின் உர்வா

6 . உர்வா பின் ஸுபைர்

7 . உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்)


மேலும் பார்க்க: அபூதாவூத்-1633.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.