(நபி-ஸல்-அவர்களின் ஒரு நிகழ்வை) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இரண்டு பேர் என்னிடம் வந்து, “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் விடைபெறும் ஹஜ்ஜின்போது சென்றோம். அப்போது அவர்கள் தர்மத்தைப் பங்கிடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் தர்மம் கேட்டோம்” என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள் எங்களை மேலும் கீழுமாகக் கூர்ந்து பார்தார்கள். பின்னர், எங்கள் இருவரையும் பலமானவர்களாகக் கண்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்கு (தர்மத்தை) வழங்குகிறேன். ஆனால், தர்மத்தில் பணக்காரனுக்கோ அல்லது உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவனுக்கோ பங்கில்லை.
(அபூதாவூத்: 1633)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ، قَالَ: أَخْبَرَنِي رَجُلَانِ:
أَنَّهُمَا أَتَيَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، وَهُوَ يُقَسِّمُ الصَّدَقَةَ، فَسَأَلَاهُ مِنْهَا، فَرَفَعَ فِينَا الْبَصَرَ وَخَفَضَهُ، فَرَآنَا جَلْدَيْنِ، فَقَالَ: «إِنَّ شِئْتُمَا أَعْطَيْتُكُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1633.
Abu-Dawood-Alamiah-1391.
Abu-Dawood-JawamiulKalim-1393.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஸத்தத்
3 . ஈஸா பின் யூனுஸ்
4 . ஹிஷாம் பின் உர்வா
5 . அவரது தந்தை (உர்வா பின் ஸுபைர்)
6 . உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்)
14 . இந்தக் கருத்தில் பெயர் கூறப்படாத, நபியை பார்த்த இருவர் வழியாக வரும் செய்திகள்:
- ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> உபைதுல்லாஹ் பின் அதீ —> இரு மனிதர்கள்
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, அபூதாவூத்-1633, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2598, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-, …
…
மேலும் பார்க்க: இப்னு மாஜா-1841.
சமீப விமர்சனங்கள்