அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிளேக் நோயால் இறந்தவர்கள் பற்றி, உயிர்த்தியாகிகளும், படுக்கையில் (இயற்கையாக) இறந்தவர்களும் நமது இறைவனிடத்தில் விவாதித்துக் கொள்வார்கள்; உயிர்த்தியாகிகள், எங்களின் இந்த சகோதரர்கள் நாங்கள் கொல்லப்பட்டதைப் போன்றே கொல்லப்பட்டார்கள். (எனவே அவர்கள் எங்களுடனே இருக்க வேண்டும்) என்று கூறுவர். படுக்கையில் (இயற்கையாக) இறந்தவர்கள், எங்களின் இந்த சகோதரர்கள் நாங்கள் படுக்கையில் இறந்ததைப் போன்றே இறந்தார்கள் என்று கூறுவர்.
அப்போது நமது இறைவன், பிளேக் நோயால் இறந்தவர்களின் காயங்களைப் பாருங்கள். அவை போரில் கொல்லப்பட்டவர்களின் காயங்களைப் போன்று இருந்தால் அவர்கள் உயிர்த்தியாகிகளை சார்ந்தவர்களாவர். அவர்களுடனே இருப்பார்கள் என்று கூறுவான். அப்போது (அவர்களின் காயங்களைப் பார்த்தால்) அவை உயிர்த்தியாகிகளின் காயங்களைப் போன்றே இருக்கும்.
அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)
(நஸாயி: 3164)
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنَا بَحِيرٌ، عَنْ خَالِدٍ، عَنْ ابْنِ أَبِي بِلَالٍ، عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
يَخْتَصِمُ الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ عَلَى فُرُشِهِمْ إِلَى رَبِّنَا فِي الَّذِينَ يُتَوَفَّوْنَ مِنَ الطَّاعُونِ، فَيَقُولُ الشُّهَدَاءُ: إِخْوَانُنَا قُتِلُوا كَمَا قُتِلْنَا، وَيَقُولُ الْمُتَوَفَّوْنَ عَلَى فُرُشِهِمْ: إِخْوَانُنَا مَاتُوا عَلَى فُرُشِهِمْ كَمَا مُتْنَا، فَيَقُولُ رَبُّنَا: انْظُرُوا إِلَى جِرَاحِهِمْ، فَإِنْ أَشْبَهَ جِرَاحُهُمْ جِرَاحَ الْمَقْتُولِينَ، فَإِنَّهُمْ مِنْهُمْ وَمَعَهُمْ، فَإِذَا جِرَاحُهُمْ قَدْ أَشْبَهَتْ جِرَاحَهُمْ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3164.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3131.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பக்கிய்யது பின் வலீத் பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/174)
என்றாலும் இந்தக் கருத்தில் உத்பா பின் அப்த் அஸ்ஸுலமீ (ரலி) வழியாக சரியான செய்தி வந்துள்ளது.
1 . இந்தக் கருத்தில் இர்பாள் பின் ஸாரியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-17159 , 17164 , முஸ்னத் பஸ்ஸார்-4194 , நஸாயீ-3164 , குப்ரா நஸாயீ-4357 , அல்முஃஜமுல் கபீர்-626 ,
2 . உத்பா பின் அப்த் அஸ்ஸுலமீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17651 .
சமீப விமர்சனங்கள்