தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17651

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில்) உயிர்த்தியாகிகளும், பிளேக் நோயால் இறந்தவர்களும் வருவார்கள். அப்போது பிளேக் நோயால் இறந்தவர்கள் நாங்களும் (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகள் தான் என்று கூறுவர்.

அப்போது, இவர்களின் காயங்களைப் பாருங்கள். அவை (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகளின் காயங்களைப் போன்று கஸ்தூரி வாசனைமிக்க இரத்தம் ஓடிக்கொண்டிருந்தால் அவர்களும் (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகள் (போன்று) தான் என்று கூறப்படும்.

(அவைகளைப் பார்த்தால்) அவர்களின் இரத்தம், கஸ்தூரி வாசனை மிக்கதாக ஓடுவதை காண்பார்கள்.

அறிவிப்பவர்: உத்பா பின் அப்த் அஸ்ஸுலமீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 17651)

حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ ضَمْضَمِ بْنِ زُرْعَةَ، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ، عَنْ عُتْبَةَ بْنِ عَبْدٍ السُّلَمِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

يَأْتِي الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ بِالطَّاعُونِ، فَيَقُولُ أَصْحَابُ الطَّاعُونِ: نَحْنُ شُهَدَاءُ، فَيُقَالُ: انْظُرُوا، فَإِنْ كَانَتْ جِرَاحُهُمْ كَجِرَاحِ الشُّهَدَاءِ تَسِيلُ دَمًا رِيحَ الْمِسْكِ، فَهُمْ شُهَدَاءُ فَيَجِدُونَهُمْ كَذَلِكَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17651.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17311.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19992-ளம்ளம் பின் ஸுர்ஆ அவர்கள் பற்றி, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    போன்றோர் இவர் பலமானவர் என்றும், அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/23)
  • அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களின் விமர்சனம் விளக்கமாக இல்லையென்பதால் இவரை பலமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும்.
  • மேலும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அயாஷ் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும். ளம்ளம் பின் ஸுர்ஆ ஷாம் வாசி என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும். இந்த செய்தியை ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    ஹஸன் தரத்தில் உள்ள செய்தி என்று கூறியுள்ளார்.

2 . இந்தக் கருத்தில் உத்பா பின் அப்த் அஸ்ஸுலமீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17651 , அல்முஃஜமுல் கபீர்-292 ,

மேலும் பார்க்க: நஸாயீ-3164 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.