நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஒருவரிடம் கடன் கேட்டனர். மூமின்களின் அன்னையே கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லாத நீங்கள் கடன் கேட்கிறீர்களே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு மைமூனா (ரலி) திருப்பிச் செலுத்தும் எண்ணத்தில் யார் கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.
(நஸாயி: 4687)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ الْأَعْمَشِ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ،
أَنَّ مَيْمُونَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَدَانَتْ فَقِيلَ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، تَسْتَدِينِينَ وَلَيْسَ عِنْدَكِ وَفَاءٌ، قَالَتْ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَخَذَ دَيْنًا وَهُوَ يُرِيدُ أَنْ يُؤَدِّيَهُ، أَعَانَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-4687.
Nasaayi-Shamila-4687.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4634.
- இந்தக் கருத்தில் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) —> மைமூனா (ரலி) என்ற அறிவிப்பாளர் தொடரில் வரும் செய்திகளில் நபித்தோழர் விடப்பட்டு வரும் செய்திகளே பலமாக இருப்பதால் இந்த செய்தி முர்ஸல் என்பதே உண்மை என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-4019)
- அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இந்த கருத்தில் வரும் அனைத்து செய்திகளையும் இணைத்து சரியானது எனக் கூறியுள்ளனர்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1029, தஃலீக் அஹ்மத்-26816)
1 . இந்தக் கருத்தில் மைமூனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அஃமஷ் —> ஹுஸைன் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா —> மைமூனா (ரலி)
பார்க்க: நஸாயீ-4687 , குப்ரா நஸாயீ-6240 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-4286 , அல்முஃஜமுல் கபீர்-1049 , 1050 , 72 , 73 , அல்முஃஜமுல் அவ்ஸத்-829 ,
- மன்ஸூர் —> ஸியாத் —> இம்ரான் பின் ஹுதைஃபா —> மைமூனா (ரலி)
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-2020 , இப்னு மாஜா-2408 , நஸாயீ-4686 , குப்ரா நஸாயீ-6239 , முஸ்னத் அபீ யஃலா-7083 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-4287 , இப்னு ஹிப்பான்-5041 , அல்முஃஜமுல் கபீர்-61 , ஹாகிம்-2204 , குப்ரா பைஹகீ-10957 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-2387 .
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 .
இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும். …
சமீப விமர்சனங்கள்