அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (எங்களுக்கு) அஸர் தொழுகை வைப்பார்கள். பிறகு எங்களில் (மேட்டுப்பகுதிகளில் ஒன்றான) “குபா”வுக்குச் செல்பவர் அங்கு சென்றடைவார். அப்போது அவர்கள் அஸர் தொழுகை தொழுது கொண்டிருப்பதைக் காண்பார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ அவர்கள், பிறகு எங்களில் (மேட்டுப்பகுதிகளில் ஒன்றான) “குபா”வுக்குச் செல்பவர் அங்கு சென்றடைவார். அப்போதும் சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும் என்று அறிவிக்கிறார்.
(நஸாயி: 506)
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَالِكٍ قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ وَإِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءٍ»
فَقَالَ أَحَدُهُمَا: «فَيَأْتِيهِمْ وَهُمْ يُصَلُّونَ». وَقَالَ الْآخَرُ: «وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-506.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-502.
சமீப விமர்சனங்கள்