தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5531

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்தும், இடிபாடுகளுக்குள் சிக்கியும் மரணிப்பதை விட்டு பாதுகாவல் தேடுதல்.

அபுல்யஸர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) பிரார்த்திப்பார்கள்:

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினத் தரத்தீ, வல்ஹத்மி, வல்ஃகரகி, வல்ஹரீக். வ அஊது பிக அய் யதகப்பத்தனிஷ் ஷைத்தானு இன்தல் மவ்த். வ அஊது பிக அன் அமூத ஃபீ ஸபீலிக முத்பிரா. வ அஊது பிக அன் அமூத லதீஃகா”

(பொருள்: அல்லாஹ்வே! உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும், இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும், நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும், நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும், (நச்சு உயிரினங்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)

(நஸாயி: 5531)

الِاسْتِعَاذَةُ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ صَيْفِيٍّ، مَوْلَى أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي الْيَسَرِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-5436.
Nasaayi-Shamila-5531.
Nasaayi-Alamiah-5436.
Nasaayi-JawamiulKalim-5464.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஷுஐப்

2 . மஹ்மூத் பின் ஃகைலான்

3 . ஃபள்ல் பின் மூஸா-அஸ்ஸீனானீ

4 . அப்துல்லாஹ் பின் ஸயீத்-அல்ஃபஸாரீ

5 . ஸைஃபீ பின் ஸியாத்

6 . அபுல்யஸர் (ரலி)-கஅப் பின் அம்ர்


மேலும் பார்க்க: அஹ்மத்-15523.

11 comments on Nasaayi-5531

  1. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் தரம் விபரம் கீழே என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் எந்த விபரமும் காணவில்லை. இந்த நஸாயீ 5531 – வது ஹதீஸ் ஸஹீஹானதா?

      1. ஜஸாக்கல்லாஹ் ஹைரன். முழு விபரங்களுக்கு முன் இது சஹீஹான செய்தியா, லயீஃபான செய்தியா என்று மட்டும் சொல்லமுடியுமா?

        1. சிலர் சரியானது என்றும் சிலர் ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரத்திலும் கூறியுள்ளனர். இதன் அறிவிப்பாளர்தொடரில் கருத்துவேறுபாடு உள்ளது. இன்ஷா அல்லாஹ் நாம் விரிவாக பார்த்துவிட்டு பதிவு செய்கிறோம்.

          1. ஜஸாக்கல்லாஹ் ஹைரன். காத்திருக்கிறோம்

          1. மிக விரைவில் பதிலளித்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

            அஹ்மத்-15523 -வது ஹதீஸின் அடிக்குறிப்பு விபரங்களில், “அபுல்யஸர் (ரலி) வழியாக வரும் செய்திகள்” என்பதற்கு கீழே கொடுத்துள்ள அபூதாவூத்-1552 மற்றும் நஸாயீ- 5532, 5533 ஆகிய ஹதீஸ்களின் லிங்க்குகளை ஓபன் செய்தால் Nothing Found என்று காட்டுகிறது. அதை சரிசெய்வீர்கள் என்பதற்காக சொல்கிறேன்

  2. இன்னும் பதிவு செய்யவில்லை. ஆய்வுத் தகவலுக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ் ஹதீஸ்களை இணைக்கிறோம்.

    1. அல்லாஹ் உங்கள் பணிகளை இலகுவாக்கி, அவற்றை இந்த சமுதாயத்துக்கு பயனுள்ளதாகவும், உங்கள் மறுமைக்கு உதவக்கூடியவையாகவும் ஆக்கியருள்வானாக!

      1. அல்ஹம்து லில்லாஹ், உங்களுக்காகவும் நாங்கள் மறைவில் பிரார்த்தனை செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.