அத்தியாயம்: 51
குடிபானங்கள்:
பாடம்:
மதுபானத் தடைச் சட்டம்.
அல்லாஹ் கூறுகிறான்:
“மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் 5:91) என்ற (ஸூரத்துல் மாயிதாவின்) வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)
மதுவை தடை செய்யும் வசனம் இறங்குவதற்கு முன் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார். அப்போது, “மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:219) என்ற ஸூரத்துல் பகராவின் வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.
பிறகு, “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!” (அல்குர்ஆன் 4:43) என்ற ஸூரத்துன் நிஸாவின் வசனம் இறங்கியது. எனவே இகாமத் கூறப்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை அழைப்பாளர், அறிந்துக்கொள்ளுங்கள்! போதையிலுள்ளவர்கள் தொழுகைக்கு நெருங்க வேண்டாம் என்று கூறினார். அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.
பிறகு, “மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் 5:91) என்ற (ஸூரத்துல் மாயிதாவின்) வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? என்ற வசனத்தைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள், நாங்கள் விலகிக் கொண்டோம்; நாங்கள் விலகிக் கொண்டோம் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்)
(நஸாயி: 5540)51 – كِتَابُ الْأَشْرِبَةِ
بَابُ تَحْرِيمِ الْخَمْرِ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91]
أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ السُّنِّيُّ قِرَاءَةً عَلَيْهِ فِي بَيْتِهِ، قَالَ: أَنْبَأَنَا الْإِمَامُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ أَحْمَدُ بْنُ شُعَيْبٍ النَّسَائِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى، قَالَ: أَنْبَأَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
لَمَّا نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ قَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا» فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ “، فَقَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَكَانَ مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقَامَ الصَّلَاةَ نَادَى: {لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْمَائِدَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، فَلَمَّا بَلَغَ {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91] قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «انْتَهَيْنَا انْتَهَيْنَا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5540.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-5473.
சமீப விமர்சனங்கள்