தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5664

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

உர்வா பின் ருவைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னுத் தைலமீ (அப்துல்லாஹ் பின் ஃபைரோஸ்) (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சந்திப்பதற்காக பயணம் சென்றார்.

பிறகு அவர்கள் கூறியதாவது:

நான், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதுவைப்பற்றி ஏதும் கூறியதை தாங்கள் செவியேற்றுள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம். “எனது சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மது அருந்தினால் அவரின் நாற்பது நாட்களின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(நஸாயி: 5664)

ذِكْرُ الرِّوَايَةِ الْمُبَيَّنَةِ عَنْ صَلَوَاتِ شَارِبِ الْخَمْرِ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا عُثْمَانُ بْنُ حِصْنِ بْنِ عَلَّاقٍ دِمَشْقِيٌّ قَالَ: حَدَّثَنَا عُرْوَةُ بْنُ رُوَيْمٍ،

أَنَّ ابْنَ الدَّيْلَمِيِّ رَكِبَ يَطْلُبُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: ابْنُ الدَّيْلَمِيِّ: فَدَخَلْتُ عَلَيْهِ، فَقُلْتُ: هَلْ سَمِعْتَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ شَأْنَ الْخَمْرِ بِشَيْءٍ، فَقَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَشْرَبُ الْخَمْرَ رَجُلٌ مِنْ أُمَّتِي فَيَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلَاةً أَرْبَعِينَ يَوْمًا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5664.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-5598.




1 . மதுவைப் பற்றி அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6644 , 6659 , 6773 , 6854 , தாரிமீ-2136 , இப்னு மாஜா-3377 , நஸாயீ-5664 , 5669 , 5670 , …

2 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4075 .

3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1862 .

4 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

அஹ்மத்- 21502 .

more hadees…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.