தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5701

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், அபூஅப்துர்ரஹ்மான் அவர்களே! நீங்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர மற்றதை தொட்டதை நான் பார்த்ததில்லையே ஏன்? எனக் கேட்டார். அதற்கவர்கள், அவ்விரண்டையும் தொடுவது பாவங்களை அழித்துவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று பதிலளித்தார்கள்.

மேலும், கஅபாவை ஏழு முறை சுற்றிவருபவர் ஒரு அடிமையை உரிமைவிட்டவர் போன்றவராவார் என்று கூறியதையும் நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(நஸாயி: 5701)

أَنْبَأَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ،

أَنَّ رَجُلًا قَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا أَرَاكَ تَسْتَلِمُ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ مَسْحَهُمَا: يَحُطَّانِ الْخَطِيئَةَ ” وَسَمِعْتُهُ يَقُولُ: «مَنْ طَافَ سَبْعًا، فَهُوَ كَعِدْلِ رَقَبَةٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5701.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-2886.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் பிற்காலத்தில் மூளைக்குழம்பியவர் என்றாலும், இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-13926-ஹம்மாத் பின் ஸைத், அதாஉ மூளைகுழம்புதற்கு முன் செவியேற்றார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
  • மேலும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்ட மனிதர், அப்துல்லாஹ் பின் உபைத் அவர்களின் தந்தை ஆவார் என்று வேறு அறிவிப்பாளர்தொடர் மூலம் தெரிகிறது. (பார்க்க: அஹ்மத்-4462 )

மேலும் பார்க்க: இப்னு மாஜா-2956 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.