தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-16418-ஸைத் பின் அஸ்லம்-அபூஉஸாமா

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஸைத் பின் அஸ்லம்-அபூஉஸாமா – زيد بن أسلم القرشي

இறப்பு: ஹி-136.

தரம்: பலமானவர்.


இயற்பெயர்:

தந்தை பெயர்:

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்:

பயணம் செய்த ஊர்கள்:

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-.

கால கட்டம்: .



 

 


ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை நேரடியாக கேட்டுள்ளாரா?

تاريخ ابن معين – رواية الدوري (3/ 219):
1013 – سَمِعت يحيى يَقُول قد سمع زيد بن أسلم من بن عمر وَلم يسمع زيد بن أسلم من جَابر

المراسيل لابن أبي حاتم (ص64):
226 – سَمِعْتُ عَلِيَّ بْنَ الْحَسَيِن بْنِ الْجُنَيْدِ يَقُولُ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ جَابِرٍ مُرْسَلٌ وَعَنْ رَافِعَ بْنِ خُدَيْجٍ مُرْسَلٌ وَعَنْ أَبِي هُرَيْرَةَ مُرْسَلٌ وَعَنْ عَائِشَةَ مُرْسَلٌ أُدْخِلَ بَيْنَهُ وَبَيْنَ عَائِشَةَ الْقَعْقَاعُ بْنُ حَكِيمٍ وَأُدْخِلَ بَيْنَهُ وَبَيْنَ أَبِي هُرَيْرَةَ عَطَاءُ بْنُ يَسَارٍ

1 . இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை நேரடியாகக் கேட்டுள்ளார். ஆனால் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

2 . மேலும் அலீ பின் ஹுஸைன் பின் ஜுனைத் அவர்கள் பின்வருமாறு கூறியதாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
குறிப்பிட்டுள்ளார்:

ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி), ராஃபிஃ பின் கதீஜ் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி), ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிப்பவை ‘முர்ஸல்-முன்கதிஃ’ ஆகும். அவருக்கும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களுக்கும் இடையில் கஃகாஃ பின் ஹகீம் என்பவர் விடுபட்டுள்ளார். மேலும், அவருக்கும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களுக்கும் இடையில் அதாஉ பின் யஸார் என்பவர் விடுபட்டுள்ளார்.

(நூல்கள்: தாரீகு இப்னு மயீன்-1013, அல்மராஸீல்-226)


3 . இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இப்னு அப்துல்பர் ஆகியோர் இவர்களுக்கு மாற்றமாக கூறியுள்ளனர்:

صحيح ابن حبان – مخرجا (12/ 237)
وَزَيْدُ بْنُ أَسْلَمَ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ؛ لِأَنَّ جَابِرًا مَاتَ سَنَةَ تِسْعٍ وَسَبْعِينَ، وَمَاتَ أَسْلَمُ مَوْلَى عُمَرَ فِي إِمَارَةِ مُعَاوِيَةَ سَنَةَ بِضْعٍ وَخَمْسِينَ، وَصَلَّى عَلَيْهِ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، وَكَانَ عَلَى الْمَدِينَةِ إِذْ ذَاكَ، فَهَذَا يَدُلُّكَ عَلَى أَنَّهُ سَمِعَ جَابِرًا، وَهُوَ كَبِيرٌ، وَمَاتَ زَيْدُ بْنُ أَسْلَمَ سَنَةَ سِتٍّ وَثَلَاثِينَ وَمِائَةَ، وَقَدْ عُمِّرَ

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இமாம் கூறுகிறார்:

ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) கேட்டுள்ளார்கள். ஏனெனில், ஜாபிர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 79 ஆம் ஆண்டில் இறந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் அடிமையும், இவரின் தந்தையுமான அஸ்லம் (ரஹ்) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், சுமார் ஹிஜ்ரி 50 ஆம் வருடத்தில் இறந்தார்கள். அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பின் ஹகம் அவர்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதுவே, ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியுற்றார்கள் என்பதற்கான ஒரு சான்றாகும்.

ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் பெரியவராகவும், நீண்ட காலம் வாழ்ந்தவராகவும் இருந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி 136 ஆம் ஆண்டில் இறந்தார்கள்.

(நூல்: இப்னு ஹிப்பான்-5418)

(எனவே ஸைத் பின் அஸ்லம் ஹிஜ்ரி 50 க்குள் பிறந்து ஹிஜ்ரி 136 இல் இறந்தார் என்றால் சுமார் 86 வருடம் வாழ்ந்துள்ளார். இவர் ஹிஜ்ரி 79 இல் மரணித்த ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது)


التمهيد – ابن عبد البر (3/ 13 ت بشار):
قال أبو عُمر: قال قومٌ: لَمْ يَسْمع زيدُ بنُ أسْلَم من جابر بن عبد الله، وقال آخرون: سَمِعَ منه، وسَمَاعُه من جابر غير مدفوع عندي، وقد سمع من ابن عُمر، وتوفي ابنُ عُمر قبل جابر بن عبد الله بنحو أربعة أعوام، توفي جابر سنة ثمان وسبعين، وتوفي ابن عمر سنة أربع وسبعين.

அபூஉமர்-இப்னு அப்துல்பர் இமாம் கூறுகிறார்:

ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்கவில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். வேறு சிலர் அவர்கள் கேட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை, ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களைக் கேட்டார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

ஏனெனில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் நேரடியாக ஹதீஸ்களைக் கேட்டுள்ளார்கள். இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்கள் ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டிலும், ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 78 (அல்லது 79) ஆம் ஆண்டிலும் இறந்தார்கள். அதாவது, ஜாபிர் (ரலி) அவர்களுக்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

(நூல்: அத்தம்ஹீத்-3/13)

எனவே இவர்கள் கூறும் தகவல், ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடமே ஹதீஸ்களை கேட்டிருக்கும்போது அவருக்கு பிறகு இறந்த ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டிருப்பார் என்பதாகும்.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.