தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-17234-ஸயீத் பின் பஷீர்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஸயீத் பின் பஷீர் அல்அஸ்தீ-அபூஅப்துர்ரஹ்மான், அபூஸலமா, அபூஹிஷாம்.

ஹி-168 …

தரம்: பலவீனமானவர், முன்கருல் ஹதீஸ்.


இயற்பெயர்: ஸயீத்

தந்தை பெயர்: பஷீர்

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துர்ரஹ்மான், அபூஸலமா, அபூஹிஷாம்.

ஊர் பெயர்: பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் திமிஷ்க்-டமாஸ்கஸ், ஷாம்.

பிறப்பு: ஹிஜ்ரீ- …

இறப்பு: ஹிஜ்ரீ-168

கால கட்டம்: 8.


இவரைப் பற்றி சுருக்கமான சில தகவல்:

  • ஸயீத் பின் பஷீர் பற்றி ஷுஃபா, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, பஸ்ஸார், துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    போன்றோர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள், இவர் கதாதா வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். இவ்வாறே இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஸாஜீ ஆகியோர், இவர் கதாதா வழியாக மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் நினைவாற்றலில் குறையுள்ளவர்; என்றாலும் அதை பொறுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இவ்வாறே இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/412, தஹ்தீபுத் தஹ்தீப்-2/8, தக்ரீபுத் தஹ்தீப்-1/374)

(இவர் கல்வியாளர், அதிகமான செய்திகளை மனனமிட்டவர்-ஹாஃபிள் என்பதால் தான் இவரை மேற்கண்ட சிலர் பாராட்டியுள்ளனர்.)




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.