தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-24059-தர்ராஜ் பின் ஸம்ஆன்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

தர்ராஜ் பின் ஸம்ஆன்–அப்துல்லாஹ் பின் ஸம்ஹ் – عبد الله بن السمح بن أسامة

ஹி-126 சுமார் …வயது.

தரம்:


இயற்பெயர்: அப்துல்லாஹ் (அல்லது) அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: ஸம்ஹ்

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: தர்ராஜ், அபுஸ்ஸம்ஹ்,

ஊர் பெயர்: எகிப்து, டமாஸ்கஸ்-திமிஷ்க்.

பிறப்பு: ஹிஜ்ரீ- …

இறப்பு: ஹிஜ்ரீ-126 அல்லது 182

கால கட்டம்: 5.


சுருக்கமான தகவல்:

தர்ராஜ் பின் ஸம்ஆன்-அபுஸ்ஸம்ஹ்-அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி

1 . சிலர் (பொதுவாக) இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.

2 . வேறுசிலர் இவர் பலமானவர் என்றக் கருத்தை மறுத்து, இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர்.

3 . வேறுசிலர் இவர் சிறிது பலவீனமானவர் என்றும்,

4 . வேறு சிலர் பலவீனமானவர் என்றும்,

5 . வேறுசிலர் முன்கருல் ஹதீஸ் என்றும்; விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.

6 . வேறுசிலர் இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகளில் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளனர்.

7 . வேறுசிலர் இவர் அறிவிக்கும் 5 ஹதீஸ்களில் தான் விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளனர்.

8 . வேறுசிலர் இவர் அறிவிக்கும் செய்திகளைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் ஏற்கலாம். இவர் புதியக் கருத்தை தரும் செய்திகளை தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.


விரிவான தகவல்:

تاريخ ابن معين – رواية الدوري (4/ 413):
5039 – سَمِعت يحيى يَقُول وَسُئِلَ عَن حَدِيث دراج عَن أبي الْهَيْثَم عَن أَي سعيد فَقَالَ مَا كَانَ هَكَذَا الْإِسْنَاد فَلَيْسَ بِهِ بَأْس فَقلت لَهُ إِن دَرَّاجًا يحدث عَن أبي الْهَيْثَم عَن أبي سعيد عَن النَّبِي صلى الله عليه وسلم قَالَ أصدق الرُّؤْيَا بالأسحار ويروى أَيْضا اذْكروا الله حَتَّى يَقُولُوا مَجْنُون فَقَالَ هما ثقتان دراج وَأَبُو الْهَيْثَم قَالَ يحيى وَقد روى هَذِه الْأَحَادِيث عمر بن الْحَارِث قلت ليحيى دراج من هُوَ قَالَ مصري وَهُوَ أَبُو السَّمْح قلت ليحيى أَبُو الْهَيْثَم من هُوَ قَالَ مصري واسْمه سُلَيْمَان بن عَمْرو

1 . இப்னுமயீன்,

 

இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இப்னு கல்ஃபூன்,பிறப்பு ஹிஜ்ரி 555
இறப்பு ஹிஜ்ரி 636
வயது: 81
இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
அபுல்காஸிம் போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.


2 . உஸ்மான் பின் ஸயீத், இப்னு யூனுஸ் போன்றோர் இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405)


3 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரின் ஹதீஸ்களில் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.


4 . இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளதாக ஃபள்லக் அர்ராஸீ அவர்களிடம் கூறப்பட்டபோது, இவர் பலமானவர் அல்ல என்றும்; எந்த சிறப்பும் அல்ல என்றும் கூறினார்.

ஸாஜீ, உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அபுல்அரப் போன்றோர் இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.


5 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகளில் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளதாக இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்தியைத் தவிர மற்றவை சரியானது என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.


6 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் இவரின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட்டவை என்று கூறியுள்ளனர்.

سؤالات الحاكم للدارقطني – الفاروق (ص: 119)
265 – دَرَّاج، أبو السَّمْح، ضَعِيْفٌ، ألقيتُ عليه حَدِيْث شُعْبَة، عن عَمْرو بن يَحْيَى، قَالَ: الْحَدِيْث الْحَسَن هكذا يكون.


سؤالات البرقاني للدارقطني ت القشقري (ص29):
142- وسمعته يقول دراج أبو السمح هو ابن سمعان مصري متروك.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405…)


7 . இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரின் 5 ஹதீஸ்களை குறிப்பிட்டுவிட்டு இவைகளை இவர் தனித்து அறிவிக்கிறார்; இவைகள் முன்கர் என்று கூறிவிட்டு இதல்லாத மற்ற செய்திகள் பரவாயில்லை என்று கூறியுள்ளார். 

الكامل في ضعفاء الرجال (4/ 15):
قال الشيخ: وعامة هذه الأحاديث التي أمليتها
مما لا يتابع دراج عليه
وفيها ما قد روى عن غيره ومن غير هذا الطريق
ولدراج، عنِ ابْن حر وأبي الهيثم، وابن حجيرة غير ما ذكرت من الحديث ويروي عن دراج عَمْرو بْن الحارث، وابن لَهِيعَة وحيوة بْن شريح وغيرهم
ومما ينكر من أحاديثه بعض ما ذكرت، وَهو قوله أصدق الرؤيا بالأسحار والشتاء ربيع المؤمن والسباع حرام وأكثروا من ذكر اللَّه حتى يقال مجنون وقد روى عنه بهذا الإسناد أَيضًا لا حليم إلَاّ ذو عثرة عن عَمْرو عَنْ دَرَّاجٍ، عَن أَبِي الْهَيْثَمِ، عَن أبي سَعِيد يرويه، عنِ ابْن وهب الغرباء
وقد تقدم ذكر من حدثناه، ومَنْ رواه، عنِ ابْن وهب في باب الحاء في ذكر حرملة بْن يَحْيى وسائر أخبار دراج غير ما ذكرت من هذه الأحاديث يتابعه الناس عليها
وأرجو أن أخرجت دراج وبرأته من هذه الأحاديث التي أنكرت عليه إن سائر أحاديثه لا بأس بها ويقرب صورته ما قال فيه يَحْيى بْن مَعِين

(நூல்கள்: அல்காஷிஃப்-2/380, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, தக்ரீபுத் தஹ்தீப்-1833, அல்இக்மால்-1473, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-647)


(வேறு சில அறிஞர்கள் இவரின் அனைத்து செய்திகளும் முன்கர்-மறுக்கப்படவேண்டியவை என்றும் கூறியுள்ளனர். இதற்கான காரணம் இவர் அறிவித்த செய்திகளின் கருத்தை மற்ற பலமானவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இவர் மாறுபட்டும், தனித்தும் அறிவித்துள்ளார். இதனால் தான் இவரை ஆரம்பத்தில் சிலர் குறிப்பிட்ட அறிவிப்பாளர்தொடரில் பலவீனமானவர் என்று கூறிவிட்டு பிறகு இவரை பொதுவாக முன்கருல் ஹதீஸ் என்றும், விடப்பட்டவர் என்றும் கருத்துக் கூறியுள்ளனர். இதற்கு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.)




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.