தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-24744-அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் பின் முஹம்மத் பின் முஸ்லிம்

A- A+

அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் பின் முஹம்மத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
– عبد الله بن صالح بن محمد بن مسلم

ஹி-136 முதல் 139 க்குள் பிறப்பு – ஹி 222 அல்லது 223 இல் இறப்பு. சுமார் 85 வயது.

தரம்: மக்பூல், ஹஸன், லீன் (கவனக்குறைவு உள்ளவர்; அதிகம் தவறிழைப்பவர் என்றும்; சிறிது பலவீனமானவர் என்றும் சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளார்)


இயற்பெயர்: அப்துல்லாஹ்

தந்தை பெயர்: ஸாலிஹ் பின் முஹம்மத்

குறிப்புப் பெயர்: அபூஸாலிஹ்

வமிசம் மற்றும் ஊர் பெயர்: ஜுஹைனீ, மிஸ்ர்-எகிப்தை சேர்ந்தவர்.

பிறப்பு: ஹிஜ்ரீ-136 முதல் 139 க்குள்.

இறப்பு: ஹிஜ்ரீ-222 அல்லது 223 க்குள்.

கால கட்டம்: 10.


  • அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் பின் முஹம்மத் என்பவர் பற்றி சிலர் பாராட்டியும் கூறியுள்ளனர். சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், லைஸ் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்றும், பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர். இவர் அறிவிக்கும் சில செய்திகளை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
  • சிலர் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர். இது பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறும்போது இவரின் கடைசிகாலத்தில் இவர் அறிவிக்கும் செய்திகளையே அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இதற்கான காரணம் இவரின் பக்கத்து வீட்டாரான காலித் பின் நுஜைஹ் என்பவர் தான் பொய் கூறுபவர். இவர் ஹதீஸ்களை எழுதித்தரும்போது அதில் இடைச் செருகல் செய்து விடுவார். எனவே அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரின் பக்கத்து வீட்டாரான காலித் பின் நுஜைஹ் என்பவர் இவரின் ஆசிரியர் போன்று ஹதீஸ்களை எழுதி இவரின் நூல்களில் சேர்த்துவிடுவார். அது தெரியாமல் இவர் நூலிலிருந்து ஹதீஸை அறிவிப்பார். எனவே இவர் விடப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
  • அபூஸுர்ஆ அவர்கள் இவர் வேண்டுமென்றே பொய் கூறுபவர் என்று நான் கருதவில்லை. இவர் ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளார். (சுருக்கம்)

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/86, தஹ்தீபுத் தஹ்தீப்-2/354, தக்ரீபுத் தஹ்தீப்-1/515…)