தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2174

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.

யார் உறங்கச் செல்லும்போது அதை ஓதுவாரோ அவரின் வீட்டிற்கும், அவரின் அண்டை வீட்டாருக்கும் அவரின் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து வீட்டினருக்கும் அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரைமேடையில் நின்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

 

 

(shuabul-iman-2174: 2174)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ غَانِمِ بْنِ حَمُّويَهِ بْنِ الْحُسَيْنِ بْنِ مُعَاذٍ، حدثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ الصَّبَّاحِ، حدثنا أَبِي، حدثنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْقُرَشِيُّ، عَنْ نَهْشَلِ بْنِ سَعِيدٍ الضَّبِّيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ حَبَّةَ الْعُرَنِيِّ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهَ، يَقُولُ:

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَعْوَادِ الْمِنْبَرِ يَقُولُ: ” مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِهِ الْجَنَّةَ إِلَّا الْمَوْتُ، وَمَنْ قَرَأَهَا حِينَ يَأْخُذُ مَضْجَعَهُ أَمَّنَهُ اللهُ عَلَى دَارِهِ وَدَارِ جَارِهِ وَالدُوَيْرَاتِ حَوْلَهُ

إِسْنَادُهُ ضَعِيفٌ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2174.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2187.




إسناد ضعيف فيه إسحاق بن الصباح الكندي وهو ضعيف الحديث ، وحبة بن جوين العرني وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்ஹாக் பின் ஸபாஹ், ஹப்பதுல் உரனிய்யி போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: தாரிமீ-3429 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.