தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-3557

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபிகளார் என்னோடு தங்கும் நாளில் நடுநிசியில் நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன். இடையில் விழிப்பு ஏற்பட்டது. என் அருமைக் கணவரை படுக்கையில் தேடினேன். அவர்கள் இல்லை. எழுந்துப் பார்த்தால் அவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். மிகச் சுருக்கமாக நின்று ருகூஉ செய்த அவர்கள் நெடுநேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். இரண்டாம் ரக்அத்தையும் அவ்வாறே நிறைவேற்றினார்கள்.

பின்பு ஸஜ்தாவிலேயே பஜ்ரு வரை அசையாமல் கிடந்தார்கள். எங்கே அவர்கள் புனித ஆத்மா கைப்பற்றப்பட்டு விட்டதோ? என்ற கவலையுடன் அவர்களது பாதங்களை நான் தொட்டேன். அவர்களின் பொற்பாதங்கள் அசைந்தன. அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். அப்பொழுது அவர்கள் ஸஜ்தாவில் இந்த துஆவை ஓதினார்கள்.

….ஸஜத லக அஸ்வதீ வஆமன பிக ஃபுவாதீ வ ஹாதிஹி யதீ யல்லதீ ஜனய்த்து பிஹா அலா நஃப்ஸீ ஃபக்ஃபிர்லீ அத்தன்பல் அலீம். ஃப இன்னஹூ லா யக்பிருத் தனூப இல்லர் ரப்புல் அளீம். அவூது பிரிளாக மின் சுக்திக, வபி முஆபாதிக மின் உகூபதிக. வபிக மின்க லா உஹ்ஸீ தனாஅன் அலைக. அன்த கமா அஸ்னய்த அலா நஃப்ஸிக…

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பொழுது, “ஆயிஷாவே! இது என்ன இரவு என உனக்கு தெரியுமா?” எனக் கேட்டுவிட்டுக் கூறினார்கள். இது ஷஃபான் பதினைந்தாம் இரவு. இவ்விரவில் அல்லாஹ் ஒரு சில பாவிகளை தவிர மற்ற முஃமின்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான். அந்த பாவிகள் மதுக்குடியை நிரந்தரமாக்கிக் கொண்டிருப்பவர்கள். விபச்சாரம், வட்டியில் மூழ்கியிருப்பவர்கள். தம் பெற்றோரை வேதனைப்படுத்துபவர்கள். உருவப்படம் வரைபவர்கள். பிறரைக் குழப்பத்தில் ஆழ்த்துபவர்கள்…

(shuabul-iman-3557: 3557)

كَمَا أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، حَدَّثَنَا أَبُو مَنْصُورٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْأَزْهَرِيُّ الْأَدِيبُ الْهَرَوِيُّ بِهَا إِمْلَاءً، أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبُو عُبَيْدِ اللهِ ابْنُ أَخِي ابْنِ وَهْبٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْفَرَجِ الصَّدَفِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ هَاشِمٍ الْبَيْرُوتِيُّ، عَنِ ابْنِ أَبِي كَرِيمَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ لَيْلَتِي، وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي، فَلَمَّا كَانَ فِي جَوْفِ اللَّيْلِ فَقَدْتُهُ، فَأَخَذَنِي مَا يَأْخُذُ النِّسَاءَ مِنَ الْغَيْرَةِ فَتَلَفَّفْتُ بِمِرْطِي أَمَّا وَاللهِ مَا كَانَ خَزٌّ، وَلَا قَزٌّ، وَلَا حَرِيرٌ، وَلَا دِيبَاجٌ، وَلَا قُطْنٌ، وَلَا كَتَّانٌ، قِيلَ لَهَا: مِمَّ كَانَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ؟، قَالَتْ: كَانَ سُدَاهُ شَعْرًا وَلُحْمَتُهُ مِنْ أَوْبارِ الْإِبِلِ، قَالَتْ: فَطَلَبْتُهُ فِي حُجَرِ نِسَائِهِ فَلَمْ أَجِدْهُ فَانْصَرَفْتُ إِلَى حُجْرَتِي فَإِذَا أَنَا بِهِ كَالثَّوْبِ السَّاقِطِ وَهُوَ يَقُولُ فِي سُجُودِهِ: ” سَجَدَ لَكَ خَيَالِي وَسَوَادِي، وَآمَنَ بِكَ فُؤَادِي، فَهَذِهِ يَدِي وَمَا جَنَيْتُ بِهَا عَلَى نَفْسِي يَا عَظِيمُ يُرْجَى لِكُلِّ عَظِيمٍ، يَا عَظِيمُ اغْفِرِ الذَّنْبَ الْعَظِيمَ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلْقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ “، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ عَادَ سَاجِدًا، فَقَالَ: ” أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَأَعُوذُ بِعَفْوِكَ مِنْ عِقَابِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ، أَقُولُ كَمَا قَالَ أَخِي دَاوُدُ، أَعْفُرُ وَجْهِي فِي التُّرَابِ لِسَيِّدِي، وَحَقٌّ لَهُ أَنْ يُسْجَدَ “، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَالَ: ” اللهُمَّ ارْزُقْنِي قَلْبًا تَقِيًّا مِنَ الشَّرِّ نَقِيًّا لَا جَافِيًا وَلَا شَقِيًّا “، ثُمَّ انْصَرَفَ فَدَخَلَ مَعِي فِي الْخَمِيلَةِ وَلِي نَفَسٌ عَالٍ، فَقَالَ: ” مَا هَذَا النَّفَسُ يَا حُمَيْرَاءُ؟ “، فَأَخْبَرْتُهُ فَطَفِقَ يَمْسَحُ بِيَدَيْهِ عَلَى رُكْبَتِي، وَهُوَ يَقُولُ: ” وَيْحَ هَاتَيْنِ الرُّكْبَتَيْنِ مَا لَقِيَتَا هَذِهِ اللَّيْلَةَ، لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ يَنْزِلُ اللهُ تَعَالَى فِيهَا إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا الْمُشْرِكَ والْمُشَاحِنَ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3557.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3544.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18189-ஸுலைமான் பின் அபூகரீமா என்பவர் பற்றி அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-3639)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: திர்மிதீ-739.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.