தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-3947

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் ஆறு பரிசுகள் கிடைக்கும்.

1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிடும்.

2 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.

3 . கராமத் (கண்ணியம்) என்னும் அணிகலன் அவருக்கு அணியப்படும்.

4 . சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தை அவர் காண்பார்.

5 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு வழங்கப்படும்.

6 . சொர்க்கத்து கண்ணழகிகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்படும்.

அறிவிப்பவர்: கைஸ் அல்ஜுதாமீ (ரலி)…

(shuabul-iman-3947: 3947)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ هُوَ الْأَصَمُّ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ دَاوُدَ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ قَيْسِ الْجُذَامِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ لِلْقَتِيلِ عِنْدَ اللهِ سِتَّ خِصَالٍ: يُغْفَرُ لَهُ خَطِيئَتُهُ فِي أَوَّلِ دَفعَةٍ مِنْ دَمِهِ، وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَيُحَلَّى حُلَّةَ الْكَرَامَةِ، وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، وَيُؤْمَنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ، وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3947.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3936.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14234-ஹுமைத் பின் தாவூத் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-17783 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.