தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17783

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே (அல்லாஹ்விடமிருந்து) ஆறு பரிசுகள் வழங்கப்படும்.

1 .  அவரின் அனைத்து தவறுகளும் மன்னிக்கப்படும்.

2 . சொர்க்கத்தில் அவரின் இருப்பிடத்தைக் அவருக்கு காட்டப்படும்.

3 . சொர்க்கத்து கண்ணழகிகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்படும்.

4 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு வழங்கப்படும்.

5 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.

5 . ஈமான் என்னும் அணிகலன் அவருக்கு அணியப்படும்.

அறிவிப்பவர்: கைஸ் அல்ஜுதாமீ (ரலி)…

(முஸ்னது அஹமது: 17783)

حَدَّثَنَا زَيْدُ بْنُ يَحْيَى الدِّمَشْقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ قَيْسٍ الْجُذَامِيِّ، رَجُلٍ كَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

يُعْطَى الشَّهِيدُ سِتَّ خِصَالٍ عِنْدَ أَوَّلِ قَطْرَةٍ مِنْ دَمِهِ: يُكَفَّرُ عَنْهُ كُلُّ خَطِيئَةٍ، وَيُرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ، وَيُؤَمَّنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَيُحَلَّى حُلَّةَ الْإِيمَانِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17115.
Musnad-Ahmad-Shamila-17783.
Musnad-Ahmad-Alamiah-17115.
Musnad-Ahmad-JawamiulKalim-17436.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34431-கைஸ் அல்ஜுதாமீ அவர்களைப் பற்றி, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    போன்றோர் நபித்தோழர் என்றும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் நபித்தோழர் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/454, அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/105)

  • வலிய்யுத்தீன்-அபூஸுர்ஆ-இப்னுல் இராகீ அவர்கள், இவர் நபித்தோழரா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. இவர் தாபிஈ என்பதே உண்மை என்று கூறியுள்ளார். (நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-872 )
  • என்றாலும் இப்னுல் இராகீ அவர்களுக்கு பின்னால் வந்த இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நபித்தோழர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/806)

  • மேலும் இதில் வரும் ராவீ-21626-இப்னு ஸவ்பான்-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் அவர்கள் பற்றி துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். இவர் வயதான போது நினைவாற்றலில் தவறு ஏற்பட்டுவிட்டது என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஸுர்ஆ, இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவரின் செய்திகள் முன்கர் என்று கூறியுள்ளார். நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    போன்ற சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/494)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்ற வகையினரில் சேர்த்துள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/572)
  • ஆறு பகுதியில் ஒரு பகுதியை விட்டுவிட்டது இவரின் தவறை உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்து மற்ற அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்திருப்பதால் இது ஸஹீஹுன் லிகைரீ-வேறு சான்றால் சரியானது என்ற நிலையை அடையும்.

5 . இந்தக் கருத்தில் கைஸ் அல்ஜுதாமீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17783 , ஷுஅபுல் ஈமான்-3947 , 3948 ,

சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-1663 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.