அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்வது (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் (முஹம்மது பின் கஃப்) கூறினார்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், இதன் கருத்து மலம், ஜலம் கழிப்பதற்காக கப்ரின் மீது உட்காருவதாகும் என்று கூறினார்.
(tayalisi-2667: 2667)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»
قَالَ أَبُو هُرَيْرَةَ: يَعْنِي: أَنْ يَجْلِسَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2667.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2657.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35284-முஹம்மது பின் அபூஹுமைத் என்பவர் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ்-பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/549)
- இந்த செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. என்றாலும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் விளக்கத்துடன் வரும் இந்த செய்தி பலவீனமானதாகும்.
மேலும் பார்க்க: முஸ்லிம்-1767 .
சமீப விமர்சனங்கள்