ஹதீஸ் எண்-1103 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடரில் இது நபியின் சொல்லாக வரவில்லை. இதுதான் மிகச் சரியானதாகும்.
எனவே நபியின் சொல்லாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸ் மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெறும் ஹதீஸ் அல்ல. ஏனெனில் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில், அப்துல்அஃலா —> ஸயீத் —> கதாதா —> ஜாபிர் பின் ஸைத் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நபியின் சொல்லாக வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.
இந்தச் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில், அப்துல்அஃலா அவர்கள் வழியாக நபித்தோழர் (இப்னு அப்பாஸ்-ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மிகச் சரியானது.
மேலும் கதாதா அவர்களின் மற்ற மாணவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறே ஸயீத் பின் அபூஅரூபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்கள் மற்றும் பிற அறிஞர்கள் இதன் அடிப்படையிலேயே முடிவு செய்து, “சாட்சிகள் இல்லாமல் திருமணம் இல்லை” என்று கூறுகின்றனர்.
பிற்காலத்தில் வந்த சில அறிஞர்களே, முந்தையவர்களின் மேற்கண்ட கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளனர். அதாவது ஒருவர் பின் ஒருவராக சாட்சி சொன்னால் அதை ஏற்கக்கூடாது என்று சிலரும், ஏற்கலாம் என்று சிலரும் கூறுகின்றனர்.
கூஃபாவின் அறிஞர்களும் வேறு சிலஅறிஞர்களில் அதிகமானோரும், “திருமண ஒப்பந்தத்தின்போது இரண்டு சாட்சிகளும் ஒரே நேரத்தில் சாட்சியாக இருந்தால் தான் திருமணம் செல்லும்” என்று கூறுகின்றனர்.
மதீனாவின் சில அறிஞர்கள், “ஒருவர் பின் ஒருவராக சாட்சியாக இருந்தாலும், அது பற்றி தெளிவாக மக்களுக்கு கூறப்பட்டால் செல்லும்” என்று கருதுகின்றனர். மாலிக் இமாமும், வேறு சிலரும் இதன்படியே முடிவு செய்கின்றனர் என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
சில அறிஞர்கள், திருமணத்தில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் சாட்சியாக இருப்பதும் செல்லும் என்று கூறுகின்றனர். அஹ்மத் இமாம், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோரும் இந்தக் கருத்தின்படி முடிவு செய்கின்றனர்.
(திர்மிதி: 1104)حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ
نَحْوَهُ
وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ. هَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ لَا نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلَّا مَا رُوِيَ عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، مَرْفُوعًا وَرُوِي عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدٍ هَذَا الحَدِيثُ مَوْقُوفًا وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَوْلُهُ: «لَا نِكَاحَ إِلَّا بِبَيِّنَةٍ». هَكَذَا رَوَى أَصْحَابُ قَتَادَةَ عَنْ قَتَادَةَ عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ: لَا نِكَاحَ إِلَّا بِبَيِّنَةٍ، وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ نَحْوَ هَذَا مَوْقُوفًا. وَفِي هَذَا البَاب عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ. وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ قَالُوا: لَا نِكَاحَ إِلَّا بِشُهُودٍ لَمْ يَخْتَلِفُوا فِي ذَلِكَ مَنْ مَضَى مِنْهُمْ إِلَّا قَوْمًا مِنَ المُتَأَخِّرِينَ مِنْ أَهْلِ العِلْمِ، وَإِنَّمَا اخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي هَذَا إِذَا شَهِدَ وَاحِدٌ بَعْدَ وَاحِدٍ فَقَالَ أَكْثَرُ أَهْلِ العِلْمِ مِنْ أَهْلِ الكُوفَةِ وَغَيْرِهِمْ: لَا يَجُوزُ النِّكَاحُ حَتَّى يَشْهَدَ الشَّاهِدَانِ مَعًا عِنْدَ عُقْدَةِ النِّكَاحِ وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ المَدِينَةِ، إِذَا أُشْهِدَ وَاحِدٌ بَعْدَ وَاحِدٍ، فَإِنَّهُ جَائِزٌ إِذَا أَعْلَنُوا ذَلِكَ، وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَغَيْرِهِ هَكَذَا قَالَ إِسْحَاقُ فِيمَا حَكَى عَنْ أَهْلِ المَدِينَةِ، وقَالَ بَعْضُ أَهْلِ العِلْمِ: يَجُوزُ شَهَادَةُ رَجُلٍ وَامْرَأَتَيْنِ فِي النِّكَاحِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1104.
Tirmidhi-Alamiah-1022.
Tirmidhi-JawamiulKalim-1018.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . குதைபா பின் ஸயீத்
3 . முஹம்மத் பின் ஜஃபர்
4 . ஸயீத் பின் அபூஅரூபா
5 . கதாதா
6 . ஜாபிர் பின் ஸைத்
7 . இப்னு அப்பாஸ் (ரலி)
மேலும் பார்க்க: திர்மிதீ-1103.
சமீப விமர்சனங்கள்